Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சிறப்பாக பணிபுரியும் 389 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

https://ift.tt/3DP63Qg

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

சிறப்புற பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2020-21ஆம் கல்வியாண்டில் அனைத்து வகையான பள்ளிகளிலும் சிறப்பாக பணிபுரிந்த 379 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சார்ந்த 10 ஆசிரியர்கள் என மொத்தம் 389 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவ்விருது வழங்குவதன் அடையாளமாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதிற்கான வெள்ளிப்பதக்கம், 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழையும் முதலமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனைப்படிக்க: 1 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பது எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்