உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,79,729 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 5,01,428 ஆக இருந்தது.
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத் தொடங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 3,79,729 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 23,22,48,399 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கொரோனா பாதிப்புக்கு 47,56,524 பேர் உயிரிழந்துள்ளனர். 20,88,56,598 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 1,86,35,277 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இதையும் படியுங்கள்: ஐநா கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் அதிபரின் மகனுக்கு கொரோனா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்