தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் வெள்ளம் தொடர்பான பாதிப்புகளால் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை மேற்கு மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் கணிசமான மழைப் பொழிவை தந்துள்ளது. பருவமழை தொடர்பான பாதிப்புகளால் ஜூன் முதல் தேதியிலிருந்து செப்டம்பர் 22ஆம் தேதி வரை தமிழகத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை, 274 குடிசைகள் பகுதியளவிலும் 47 குடிசைகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
122 வீடுகள் பகுதியளவிலும் 11 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை கால பாதிப்புகளால் இதுவரை 180 கால்நடைகள் உயிரிழந்திருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது
இதனைப்படிக்க...கோடிகள் வேண்டாம் காதலே போதும்! - காதலுக்காக ராஜ வாழ்க்கையை துறக்கும் ஜப்பான் இளவரசி!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்