இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன், மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் 24ஆம் தேதி வெள்ளை மாளிகையில் நேரடியாக ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது நான்கு நாடுகளுக்கிடையில் உறவை வலுப்படுத்துவதும் குறித்தும், கொரோனா தொற்றை கூட்டாக எதிர்கொள்வது, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுதந்திரமான இந்தோ பசிபிக் கடல் பரப்பு குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இதற்கு முன் இந்த நான்கு தலைவர்களும் காணொலி மூலம் கடந்த மார்ச் மாதம் ஆலோசனை நடத்தியிருந்தாலும் நேரில் ஒன்றாக சந்தித்து பேசவிருப்பது இதுவே முதல்முறையாகும். குவாட் எனப்படும் நான்கு நாடுகளின் கூட்டமைப்பு கடந்த 2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்