கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 22 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக சிவசேனா அறிவித்துள்ளது.
கோவா தலைநகர் பனாஜிக்கு சென்றுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத், கோவாவும் மகாராஷ்ட்ராவும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான உறவை பகிர்ந்து கொண்டிருப்பதாகக் கூறினார். சிவசேனா கட்சி மகாராஷ்டிராவை ஆள்வதைப் போன்று கோவாவையும் ஆளும் என்று அவர் குறிப்பிட்டார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் போட்டியிட முடியுமெனில், கோவாவை ஒட்டியுள்ள மகாராஷ்டிராவை சேர்ந்த சிவசேனாவால் முடியாதா? என்று ரௌத் கேள்வி எழுப்பினார்.
கோவாவில் யாருடனும் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பவில்லை எனவும் சஞ்சய் ரௌத் தெரிவித்தார். 40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டப்பேரவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2WpUuhvகோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 22 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக சிவசேனா அறிவித்துள்ளது.
கோவா தலைநகர் பனாஜிக்கு சென்றுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத், கோவாவும் மகாராஷ்ட்ராவும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான உறவை பகிர்ந்து கொண்டிருப்பதாகக் கூறினார். சிவசேனா கட்சி மகாராஷ்டிராவை ஆள்வதைப் போன்று கோவாவையும் ஆளும் என்று அவர் குறிப்பிட்டார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் போட்டியிட முடியுமெனில், கோவாவை ஒட்டியுள்ள மகாராஷ்டிராவை சேர்ந்த சிவசேனாவால் முடியாதா? என்று ரௌத் கேள்வி எழுப்பினார்.
கோவாவில் யாருடனும் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பவில்லை எனவும் சஞ்சய் ரௌத் தெரிவித்தார். 40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டப்பேரவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்