தமிழ்நாடு முழுவதும் இரண்டாவது கட்ட மெகா தடுப்பூசி முகாம்களில் 15 லட்சம் என்ற இலக்கைத் தாண்டி16 லட்சத்து 43 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. சென்னையில் உள்ள முகாம்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 12ஆம் தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம், ஒரே நாளில் சுமார் 29 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
இதில் 15 லட்சம் தடுப்பூசி என்ற இலக்கை தாண்டி 16லட்சத்து 43ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் ரயில் நிலையங்கள் உட்பட ஆயிரத்து 600 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கரூர், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களிலும் ஏராளமானோர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். செப்டம்பர் மாதத்தில் இதுவரை ஒரு கோடியே 7 லட்சத்து 70 ஆயிரத்து 761 பேர் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியுள்ளது.
முன்னதாக, சென்னை சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கலில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பணியில் இருந்த சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோரை ஊக்கப்படுத்தினார். மேலும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு முதலமைச்சர் பாராட்டுகளை தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்