ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தாண்டில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் முதல் கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவசமாக புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நடைபெறும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 ஆயிரம் புதிய மின் இணைப்புகளுக்கான ஆணையை விவசாயிகளுக்கு வழங்குகிறார். வரும் மார்ச் மாதத்திற்குள் மீதமுள்ள 75 ஆயிரம் இலவச இணைப்புகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்