துபாய் கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நடப்பு ஐபிஎல் சீசனின் 32-வது லீக் ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணிக்காக எவின் லூயிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 54 ரன்களை சேர்த்தனர். லூயிஸ் 21 பந்துகளில் 36 ரன்களை எடுத்து அவுட்டானார். தொடர்ந்து வந்த அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் களம் இறங்கிய லிவிங்க்ஸ்டன் உடன் 48 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஜெய்ஸ்வால். லிவிங்க்ஸ்டன் 25 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 49 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
மஹிபால் லோம்ரோர் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 43 ரன்களை குவித்து அவுட்டானார். அதில் 2 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். ரியான் பராக், ராகுல் தெவாட்டியா, கிறிஸ் மோரிஸ் என மூன்று ராஜஸ்தான் லோயர் ஆர்டர் வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகினர்.
இருபது ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ராஜஸ்தான் அணி 185 ரன்களை குவித்துள்ளது. பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, இஷான் போரல், ஹர்ப்ரீத் பிரார் மாதிரியான வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இதில் அர்ஷ்தீப் நான்கு ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 20 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டுகிறது பஞ்சாப்.
இதையும் படிக்கலாம் : ‘கேப்டன்சி பதவி’ கோலி தானாக முடிவு எடுக்கிறாரா.. சூழலின் அழுத்தம் காரணமா?- என்ன நடக்கிறது?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்