ஜவுளித்துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதன் பின் பேசிய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல், ஜவுளித்துறையில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் 10 ஆயிரத்து 683 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊக்கத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார். இதனால் தமிழகம் உள்ளிட்ட ஜவுளித் தொழில் சார்ந்த மாநிலங்கள் மிகவும் பலன் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
வரும் ராபி பருவத்திற்கான கோதுமை, பார்லி, பருப்பு வகைகள், கடுகு உள்ளிட்ட பயிர்களுக்கான கொள்முதல் விலையை அதிகரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார். இதற்கிடையே இந்திய விமானப்படைக்கு 56 போக்குவரத்து விமானங்கள் வாங்க பாதுகாப்புக்கான மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 56 விமானங்களில் 16 ஸ்பெயினிலிருந்து அடுத்த 4 ஆண்டுக்குள் வாங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மற்ற 40 விமானங்கள் இந்தியாவிலேயே டாட்டா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ராணுவம் பயன்படுத்தும் விமானம் இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தனியார் துறையில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்வதால் நாட்டிற்கு ஏராளமான அன்னியச் செலாவணி மீதமாவதுடன் உள்நாட்டில் தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும் பெருகும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்