தமிழ்நாடு பாஜகவின் தலைவராகி, மாநிலம் முழுக்க சுழன்றுகொண்டிருக்கிறார் அண்ணாமலை. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவரானதும் தற்போது குடியிருப்பது சென்னையில். வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு இன்று 382-ஆவது பிறந்த தினம். அவரிடம் சென்னை அனுபவங்கள் குறித்து பேசினோம், உற்சாகமுடன் பேசத் தொடங்குகிறார்...
“சென்னை அற்புதமான ஊர். தமிழகத்தைத் தாங்கிப் பிடிக்கக்கூடிய ஊர். அதிக வரலாறுகள் நடந்த ஊர். இன்னமும் வரலாற்றைக் கடைப்பிடிக்கும் ஊர். பல்வேறு பெருமைகளைக் கொண்ட சென்னைக்கு நான் ஏழாவது படிக்கும்போதுதான், முதல் முறையாக பள்ளிச் சுற்றுலாவுக்காக வந்தேன். அதன்பிறகு, சென்னைக்கு நினைவுத் தெரிந்து உறவினர்கள், நண்பர்களின் திருமணங்களில் கலந்துகொள்ள வருவேன். ஆனால், தொடர்ச்சியாக சென்னையில் தங்குவது என்பது பாஜக மாநிலத் தலைவரான பிறகுதான். சென்னை அறிமுகம் லேட்டாக ஆரம்பமானாலும் கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்க ஆரம்பித்துவிட்டது. முன்பு சென்னை வந்தால் பீச்சை பார்த்துவிட்டு வீட்டிற்குச் செல்லும் ஆள் நான். ஆனால், இப்போது சென்னை மேலேயே காதல் வர ஆரம்பித்திருக்கிறது.
அதேசமயம், பெஸ்ட் ஊர் என்னுடைய கிராமம்தான். கிராமத்தை விட்டு பெரு மாநகரில் வசிக்க ஆரம்பிக்கும்போது மாநகரம் குறித்த சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. சென்னை சாலையெல்லாம் குழிகள் தோண்டி வைத்திருக்கிறார்கள். இவ்வளவு குழிகளை நான் எங்கும் பார்த்ததில்லை. சென்னை மீது காதல் இருக்கிறது. சென்னை மக்கள் மீது பெரிய நம்பிக்கையும் மரியாதையும் இருக்கிறது. ஆனால், இவ்வளவு இடத்தை ஏன் வெட்டி போட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எங்குப் போனாலும் டேக் டைவர்ஷன்... டேக் டைவர்ஷனு விவேக் சார் சொல்றமாதிரி இருக்கு. திருப்பதிக்கே போய்டும்போல. அதனால், ‘சிங்காரச் சென்னை’ என்பதை அரசு வேகமாக செயல்படுத்த வேண்டும்” என்று அரசுக்கு அக்கறையுடன் கோரிக்கை வைப்பவரிடம், “சென்னையில் அதிகம் செல்லும் இடம் எது?” எது என்று நாம் கேட்டபோது...
“கட்சி ஆஃபிஸ்தான். அதற்கு, அடுத்தப்படியாக கிடைக்கும் குறைந்த நேரங்களில் பீச் ஃப்ரீயா இருக்கும்போது கடலைப் பார்த்து உட்கார்ந்து விட்டு வரும் பழக்கம் இப்போதான் ஆரம்பித்திருக்கிறது. நான் ஒரு கடல் ஆள். எங்கு கடல் இருந்தாலும் போய் உட்கார்ந்துக்கொள்வேன். ஐ.பி.எஸ் பணியின்போது மங்களூரில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பீச் செல்வேன். அப்படி இருக்கும்போது, சென்னை பிடிக்காமல் இருக்குமா? இப்போது, கடைசி 20 நட்களாக கடலை நோக்கி அதிகம் செல்கிறேன். சிறுவயதில் நான் சென்னையைப் பார்த்த அதே பிரமிப்போடுதான், இப்போதும் பார்க்கிறேன். சென்னை மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இனிய சென்னை தின வாழ்த்துகள்” என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3j75LeZதமிழ்நாடு பாஜகவின் தலைவராகி, மாநிலம் முழுக்க சுழன்றுகொண்டிருக்கிறார் அண்ணாமலை. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவரானதும் தற்போது குடியிருப்பது சென்னையில். வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு இன்று 382-ஆவது பிறந்த தினம். அவரிடம் சென்னை அனுபவங்கள் குறித்து பேசினோம், உற்சாகமுடன் பேசத் தொடங்குகிறார்...
“சென்னை அற்புதமான ஊர். தமிழகத்தைத் தாங்கிப் பிடிக்கக்கூடிய ஊர். அதிக வரலாறுகள் நடந்த ஊர். இன்னமும் வரலாற்றைக் கடைப்பிடிக்கும் ஊர். பல்வேறு பெருமைகளைக் கொண்ட சென்னைக்கு நான் ஏழாவது படிக்கும்போதுதான், முதல் முறையாக பள்ளிச் சுற்றுலாவுக்காக வந்தேன். அதன்பிறகு, சென்னைக்கு நினைவுத் தெரிந்து உறவினர்கள், நண்பர்களின் திருமணங்களில் கலந்துகொள்ள வருவேன். ஆனால், தொடர்ச்சியாக சென்னையில் தங்குவது என்பது பாஜக மாநிலத் தலைவரான பிறகுதான். சென்னை அறிமுகம் லேட்டாக ஆரம்பமானாலும் கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்க ஆரம்பித்துவிட்டது. முன்பு சென்னை வந்தால் பீச்சை பார்த்துவிட்டு வீட்டிற்குச் செல்லும் ஆள் நான். ஆனால், இப்போது சென்னை மேலேயே காதல் வர ஆரம்பித்திருக்கிறது.
அதேசமயம், பெஸ்ட் ஊர் என்னுடைய கிராமம்தான். கிராமத்தை விட்டு பெரு மாநகரில் வசிக்க ஆரம்பிக்கும்போது மாநகரம் குறித்த சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. சென்னை சாலையெல்லாம் குழிகள் தோண்டி வைத்திருக்கிறார்கள். இவ்வளவு குழிகளை நான் எங்கும் பார்த்ததில்லை. சென்னை மீது காதல் இருக்கிறது. சென்னை மக்கள் மீது பெரிய நம்பிக்கையும் மரியாதையும் இருக்கிறது. ஆனால், இவ்வளவு இடத்தை ஏன் வெட்டி போட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எங்குப் போனாலும் டேக் டைவர்ஷன்... டேக் டைவர்ஷனு விவேக் சார் சொல்றமாதிரி இருக்கு. திருப்பதிக்கே போய்டும்போல. அதனால், ‘சிங்காரச் சென்னை’ என்பதை அரசு வேகமாக செயல்படுத்த வேண்டும்” என்று அரசுக்கு அக்கறையுடன் கோரிக்கை வைப்பவரிடம், “சென்னையில் அதிகம் செல்லும் இடம் எது?” எது என்று நாம் கேட்டபோது...
“கட்சி ஆஃபிஸ்தான். அதற்கு, அடுத்தப்படியாக கிடைக்கும் குறைந்த நேரங்களில் பீச் ஃப்ரீயா இருக்கும்போது கடலைப் பார்த்து உட்கார்ந்து விட்டு வரும் பழக்கம் இப்போதான் ஆரம்பித்திருக்கிறது. நான் ஒரு கடல் ஆள். எங்கு கடல் இருந்தாலும் போய் உட்கார்ந்துக்கொள்வேன். ஐ.பி.எஸ் பணியின்போது மங்களூரில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பீச் செல்வேன். அப்படி இருக்கும்போது, சென்னை பிடிக்காமல் இருக்குமா? இப்போது, கடைசி 20 நட்களாக கடலை நோக்கி அதிகம் செல்கிறேன். சிறுவயதில் நான் சென்னையைப் பார்த்த அதே பிரமிப்போடுதான், இப்போதும் பார்க்கிறேன். சென்னை மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இனிய சென்னை தின வாழ்த்துகள்” என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்