பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப் அணியில் இருந்து கண்ணீர் மல்க விடைபெற்றார் கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி. ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் 21 ஆண்டுகளுக்கு பிறகு வெளியேறினார் மெஸ்ஸி.
நிதி, கட்டமைப்பு தடைகள் காரணமாக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என அணி நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2000-இல் இளம் வீரராக மெஸ்ஸி இந்த அணிக்காக களம் இறங்கினார். அந்த அணிக்காக 524 போட்டிகளில் 474 கோல்களை அடித்துள்ளார். ஆறுமுறை பாலன் டி ஓர் விருதை வென்ற உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான மெஸ்ஸி மெஸ்ஸி.
கடந்த செப்டம்பரில் அவர் பார்சிலோனா அணியை விட்டு விலக உள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒப்பந்தம் அதற்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என சொல்லப்பட்ட நிலையில் அப்போதைக்கு அந்த முடிவை கைவிட்டார். இந்நிலையில் தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகததால் எந்த சட்ட சிக்கலும் இனி மெஸ்ஸிக்கு இல்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்