உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15-க்குள் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இதில், உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்