இந்திய அணியின் துணைக் கேப்டன் ரஹானே டெஸ்ட் போட்டிகளில் பல ஆட்டங்களில் இக்கட்டான நேரங்களில் ஆபத்பாந்தவனாக இருந்து தனது கிளாசிக்கான பேட்டிங் மூலம் தோல்வியில் இருந்து காப்பாற்றியவர். இந்திய நடுவரிசையில் 5-ஆம் இடத்தில் களமிறங்கி பல முக்கிய இன்னிங்ஸை விளையாடிய ரஹானே அண்மைக் காலமாக சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவது இந்திய அணிக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இப்போது ரஹானே பார்முக்கு வந்துவிடுவார், அப்போது வந்துவிடுவார் என நினைத்தே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரும் வந்துவிட்டது.
ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் ரஹானே. கடைசியாக 2020 இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது மெல்போர்னில் நடைபெற்றப் போட்டியில் அட்டகாசமாக விளையாடி சதமடித்தார் ரஹானே.
மேலும் அந்தத் தொடரை இந்திய அணிக்கு தலைமைதாங்கி வரலாற்று வெற்றியையும் பெற்றார் ரஹானே. ஆனால் அந்த மெல்போர்ன் சதத்துக்கு பின்பு 15 இன்னிங்ஸ் விளையாடியுள்ள ரஹானே ஓர் அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் ரன்களை சேர்க்கவில்லை.
இப்போது இங்கிலாந்துத்து எதிராக நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் 5 ரன்களிலும், லார்ட்ஸில் நடைபெற்று வரும் 2-ஆவது டெஸ்ட் போட்டியில் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து தனக்கு மட்டுமல்லாமல் அணிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார் ரஹானே. 2020 ஆம் ஆண்டுக்கு பின்பு 22 டெஸ்ட் இன்னிங்ஸில் 541 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் ரஹானே. அவரின் ஆவரேஜ் 25.76 ஆகவும், அதில் 1 சதம் 1 அரை சதமும் மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் டெஸ்ட் போட்டியை மிகவும் கவனமாக கையாளுபவர் ரஹானே. மிக முக்கியமாக "ஆஃப் ஸ்டம்புக்கு" வெளியே செல்லும் பந்துகளை தொடவேமாட்டார். ஆனால் நேற்றையப் போட்டியில் ஆண்டர்சனின் மிகவும் சுமாரான "அவுட் ஸ்விங்" பந்தில் கூட ஆட்டமிழந்தார் ரஹானே.
இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேனான விவிஎஸ் லஷ்மண் "கடந்த 8 - 10 மாதங்களாக எந்த தவறை செய்து புஜாராவும், ரஹானேவும் ஆட்டமிழந்தனரோ அதே தவறைதான் இப்போதும் செய்து ஆட்டமிழக்கின்றனர். விரைவாக ரன்களை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கிறதே தவிர அவர்களுக்கு தவறை எப்படி சரி செய்வது என தெரியவில்லை.
பந்தை நோக்கி அவர்களின் பேட்தான் போகிறதே தவிர கால்கள் அசைவு சுத்தமாக இல்லை. அவர்களுக்கு ஒருவித பதற்றமும், அழுத்தமும் இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும். இல்லையேல் அவர்களின் இடத்தை பிடிக்க இளம் வீரர்கள் தயாராக இருப்பதும் அவர்களின் அழுத்தத்துக்கு காரணமாக இருக்கும்" என்றார் அவர்.
ரஹானேவின் வருகை - ஒரு பிளாஷ்பேக்
இந்திய அணியின் அட்டகாசமான 5 வீரர்களில் ஒருவராக இருந்தவர் விவிஎஸ் லக்ஷ்மன். டெஸ்ட் போட்டிகளில் பல முன்னணி அணிகளுக்கு லக்ஷமனின் ஆட்டம் சிம்ம சொப்பனமாக இருந்தது. அந்தக் காலத்தில் வீரியமான அணியாக இருந்த ஆஸ்திரேலியாவை அசால்டாக சமாளித்தவர் லக்ஷமன். ஆனால் அவரின் அந்திம காலங்களில் அவருக்கு மாற்றான வீரரை டெஸ்ட் அணியில் இணைக்க தேடிக்கொண்டிருந்த தேர்வாளர்களின் கண்களுக்கு தென்பட்டவர்தான் ரஹானே. இக்கட்டான நேரத்தில் இந்திய அணியை பல நேரங்களில் தூக்கிவிட்டு, இப்போது ஆலமர விருட்சமாய் வளர்ந்து நின்றார் ரஹானே.
இப்போது டெஸ்ட் அணியில் நிரந்தர இடம்பிடித்துள்ள ரஹானே, முதலில் அறிமுகமாகியது டி20 போட்டியில்தான். 2011 ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது மான்செஸ்டரில் நடைபெற்ற டி20 போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி 39 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார் ரஹானே.
இந்திய அணியில் தொடர்ந்து ரஹானே இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் "அவுட் ஆஃப்" பார்ம் மற்றும் டி20 அணியில் இடம் பெற கடுமையான போட்டி இருந்ததால் இந்தியாவுக்காக 20, டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடினார் ரஹானே. பின்பு ஒருநாள் அணிக்காக 90 போட்டிகளில் விளையாடியும் நிரந்தர இடம் கிடைக்கவில்லை ரஹானேவுக்கு.
இத்தனைக்கும் ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள், 24 சதங்கள் என ஆவரேஜ் 35.26 என அசத்தலாக இருந்தும் தொடர்ந்து அணியில் நீடிக்க முடியவில்லை. ஆனாலும் துவண்டு போகாத ரஹானே தொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டே இருந்தார். ஆனால் எப்போதும் ரஹானேவின் திறமை மீது தேர்வாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஏனென்றால் ரஹானேவின் ஆட்டத்திறன் அப்படிப்பட்டது.
ரஹானேவின் ஆட்டத்தை பார்க்கும் முன்னாள் வீரர்கள் பலரும் அவரை "கிளாசிக் ரஹானே" என புகழ்வார்கள். அத்தனை நேர்த்தியான ஷாட்டுகள் ரஹானேவின் ஆட்டத்தில் இருக்கும்.விவிஎஸ் லக்ஷமன் 2012 இல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்றார். அப்போது அவரின் இடத்தை நிரப்ப சரியான நபரை தேடிக்கொண்டிருந்த தேர்வாளர்கள் கண்ணில் பட்டார் ரஹானே.
இதனையடுத்து 2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுடன் டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். பின்பு அடுத்தடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீல், இலங்கை என அனைத்து நாடுகளுக்கும் எதிராகவும் சதமடித்தவர் ரஹானே. ரஹானே 75 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4652 ரன்களை எடுத்துள்ளார். மொத்தம் 12 சதங்கள் 23 அரை சதம் என இருக்கிறது. இது ரஹானேவுகக்கு சறுக்கல் மிகுந்த காலக்கட்டம். நிச்சயம் அடுத்தடுத்தப் போட்டிகளில் தன்னை மீண்டும் நிரூபிப்பார் என்பதே அனைவரின் ஆவலாகவும் இருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3fZDSUsஇந்திய அணியின் துணைக் கேப்டன் ரஹானே டெஸ்ட் போட்டிகளில் பல ஆட்டங்களில் இக்கட்டான நேரங்களில் ஆபத்பாந்தவனாக இருந்து தனது கிளாசிக்கான பேட்டிங் மூலம் தோல்வியில் இருந்து காப்பாற்றியவர். இந்திய நடுவரிசையில் 5-ஆம் இடத்தில் களமிறங்கி பல முக்கிய இன்னிங்ஸை விளையாடிய ரஹானே அண்மைக் காலமாக சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவது இந்திய அணிக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இப்போது ரஹானே பார்முக்கு வந்துவிடுவார், அப்போது வந்துவிடுவார் என நினைத்தே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரும் வந்துவிட்டது.
ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் ரஹானே. கடைசியாக 2020 இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது மெல்போர்னில் நடைபெற்றப் போட்டியில் அட்டகாசமாக விளையாடி சதமடித்தார் ரஹானே.
மேலும் அந்தத் தொடரை இந்திய அணிக்கு தலைமைதாங்கி வரலாற்று வெற்றியையும் பெற்றார் ரஹானே. ஆனால் அந்த மெல்போர்ன் சதத்துக்கு பின்பு 15 இன்னிங்ஸ் விளையாடியுள்ள ரஹானே ஓர் அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் ரன்களை சேர்க்கவில்லை.
இப்போது இங்கிலாந்துத்து எதிராக நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் 5 ரன்களிலும், லார்ட்ஸில் நடைபெற்று வரும் 2-ஆவது டெஸ்ட் போட்டியில் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து தனக்கு மட்டுமல்லாமல் அணிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார் ரஹானே. 2020 ஆம் ஆண்டுக்கு பின்பு 22 டெஸ்ட் இன்னிங்ஸில் 541 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் ரஹானே. அவரின் ஆவரேஜ் 25.76 ஆகவும், அதில் 1 சதம் 1 அரை சதமும் மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் டெஸ்ட் போட்டியை மிகவும் கவனமாக கையாளுபவர் ரஹானே. மிக முக்கியமாக "ஆஃப் ஸ்டம்புக்கு" வெளியே செல்லும் பந்துகளை தொடவேமாட்டார். ஆனால் நேற்றையப் போட்டியில் ஆண்டர்சனின் மிகவும் சுமாரான "அவுட் ஸ்விங்" பந்தில் கூட ஆட்டமிழந்தார் ரஹானே.
இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேனான விவிஎஸ் லஷ்மண் "கடந்த 8 - 10 மாதங்களாக எந்த தவறை செய்து புஜாராவும், ரஹானேவும் ஆட்டமிழந்தனரோ அதே தவறைதான் இப்போதும் செய்து ஆட்டமிழக்கின்றனர். விரைவாக ரன்களை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கிறதே தவிர அவர்களுக்கு தவறை எப்படி சரி செய்வது என தெரியவில்லை.
பந்தை நோக்கி அவர்களின் பேட்தான் போகிறதே தவிர கால்கள் அசைவு சுத்தமாக இல்லை. அவர்களுக்கு ஒருவித பதற்றமும், அழுத்தமும் இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும். இல்லையேல் அவர்களின் இடத்தை பிடிக்க இளம் வீரர்கள் தயாராக இருப்பதும் அவர்களின் அழுத்தத்துக்கு காரணமாக இருக்கும்" என்றார் அவர்.
ரஹானேவின் வருகை - ஒரு பிளாஷ்பேக்
இந்திய அணியின் அட்டகாசமான 5 வீரர்களில் ஒருவராக இருந்தவர் விவிஎஸ் லக்ஷ்மன். டெஸ்ட் போட்டிகளில் பல முன்னணி அணிகளுக்கு லக்ஷமனின் ஆட்டம் சிம்ம சொப்பனமாக இருந்தது. அந்தக் காலத்தில் வீரியமான அணியாக இருந்த ஆஸ்திரேலியாவை அசால்டாக சமாளித்தவர் லக்ஷமன். ஆனால் அவரின் அந்திம காலங்களில் அவருக்கு மாற்றான வீரரை டெஸ்ட் அணியில் இணைக்க தேடிக்கொண்டிருந்த தேர்வாளர்களின் கண்களுக்கு தென்பட்டவர்தான் ரஹானே. இக்கட்டான நேரத்தில் இந்திய அணியை பல நேரங்களில் தூக்கிவிட்டு, இப்போது ஆலமர விருட்சமாய் வளர்ந்து நின்றார் ரஹானே.
இப்போது டெஸ்ட் அணியில் நிரந்தர இடம்பிடித்துள்ள ரஹானே, முதலில் அறிமுகமாகியது டி20 போட்டியில்தான். 2011 ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது மான்செஸ்டரில் நடைபெற்ற டி20 போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி 39 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார் ரஹானே.
இந்திய அணியில் தொடர்ந்து ரஹானே இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் "அவுட் ஆஃப்" பார்ம் மற்றும் டி20 அணியில் இடம் பெற கடுமையான போட்டி இருந்ததால் இந்தியாவுக்காக 20, டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடினார் ரஹானே. பின்பு ஒருநாள் அணிக்காக 90 போட்டிகளில் விளையாடியும் நிரந்தர இடம் கிடைக்கவில்லை ரஹானேவுக்கு.
இத்தனைக்கும் ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள், 24 சதங்கள் என ஆவரேஜ் 35.26 என அசத்தலாக இருந்தும் தொடர்ந்து அணியில் நீடிக்க முடியவில்லை. ஆனாலும் துவண்டு போகாத ரஹானே தொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டே இருந்தார். ஆனால் எப்போதும் ரஹானேவின் திறமை மீது தேர்வாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஏனென்றால் ரஹானேவின் ஆட்டத்திறன் அப்படிப்பட்டது.
ரஹானேவின் ஆட்டத்தை பார்க்கும் முன்னாள் வீரர்கள் பலரும் அவரை "கிளாசிக் ரஹானே" என புகழ்வார்கள். அத்தனை நேர்த்தியான ஷாட்டுகள் ரஹானேவின் ஆட்டத்தில் இருக்கும்.விவிஎஸ் லக்ஷமன் 2012 இல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்றார். அப்போது அவரின் இடத்தை நிரப்ப சரியான நபரை தேடிக்கொண்டிருந்த தேர்வாளர்கள் கண்ணில் பட்டார் ரஹானே.
இதனையடுத்து 2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுடன் டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். பின்பு அடுத்தடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீல், இலங்கை என அனைத்து நாடுகளுக்கும் எதிராகவும் சதமடித்தவர் ரஹானே. ரஹானே 75 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4652 ரன்களை எடுத்துள்ளார். மொத்தம் 12 சதங்கள் 23 அரை சதம் என இருக்கிறது. இது ரஹானேவுகக்கு சறுக்கல் மிகுந்த காலக்கட்டம். நிச்சயம் அடுத்தடுத்தப் போட்டிகளில் தன்னை மீண்டும் நிரூபிப்பார் என்பதே அனைவரின் ஆவலாகவும் இருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்