Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கொரோனாவுக்கு எதிரான போரில் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி - பிரதமர் மோடி உரை

https://ift.tt/3g3Yxqo

'கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகத்திலேயே நம் நாடுதான் முதலிடத்தில் உள்ளது' என பெருமிதம் தெரிவித்தார் பிரதமர் மோடி.
 
75-வது சுதந்திர தினம் நாடெங்கும் கொண்டாடப்படும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
 
''நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திரத்தை பெற்றுத் தந்த போராட்டத் தியாகிகள் அனைவரையும் இத்தருணத்தில் நினைவுகூர்கிறேன். நாட்டை உருவாக்கியவர்கள், வளர்ச்சியடைய செய்த அனைவரையும் இந்நேரத்தில் நினைவுகூர்கிறேன். கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பூசி தயாரித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. கொரோனாவுக்கு எதிரான போரில் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.
 
ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு நாட்டின் பெருமையை உலகறிய செய்தவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். ஒலிம்பிக் தடகளத்தில் புதிய வரலாற்றை படைத்தது மிகப்பெரிய விஷயம்.
 
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகத்திலேயே நம் நாடுதான் முதலிடத்தில் உள்ளது. கொரோனா தடுப்பூசியை இந்தியாவிலேயே உருவாக்கியதால்தான் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கிறது. உலகின் முன்னணி நாடுகளில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்க தொடங்கியதோ அப்போதே இந்தியாவிலும் கிடைத்தது'' என்று உரையாற்றினார்.
 
முன்னதாக, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி கைத்தட்டி பாராட்டு தெரிவித்தார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்