ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக ஒற்றுமையாக இருக்கவும், முந்தைய ஆட்சி தொடரவும் நான்தான் முக்கிய காரணம் என்பதே திமுகவினருக்கும், அக்கட்சித் தலைவருக்கும் என்மேல் கோபம் ஏற்பட காரணம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சாடியுள்ளார்.
சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, அதிமுக தொண்டர்கள் திரண்டு வந்து மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.
திமுக அரசால், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என்மேல் பொய்வழக்குகள் போடப்பட்டது. அதன் காரணமாக எனது உறவினர்கள் மற்றும் எனக்கு சம்மந்தமில்லாத நிறைய இடங்களில் காவல் துறையை ஏவி சோதனைகளை நடத்தியுள்ளனர். இதை சட்டரீதியாக சந்திப்போம். மேலும், சோதனையின்போது ரூ.13 லட்சம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இது போன்று எதையும் அதிகாரிகள் எடுத்துச் செல்லவில்லை.
வங்கிக்கணக்கு முடக்கப்பட்டதாக வெளியான தகவலும் தவறு. தன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிபதிகளை நம்புகிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்போம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக ஒற்றுமையாக இருக்கவும், முந்தைய ஆட்சி தொடரவும் நான் முக்கிய காரணம் என்பதால் திமுகவினருக்கும், அக்கட்சித் தலைவருக்கும் என்மேல் கோபம் ஏற்பட காரணம் என்று குற்றச்சாட்டியவர் தொடர்ந்து....
அப்போது செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி “சோதனை நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சியினர், பொதுமக்கள் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கோவையில் 50 ஆண்டுகாலம் இல்லாத ஆட்சியை தந்ததால் மக்கள் தனக்கு ஆதரவு அளிக்கின்றனர்” என்றார்.
மேலும், லஞ்ச ஒழிப்பு துறை சோதனையின் போது 13 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும், தமது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் வெளியான தகவலில் உண்மையில்லை என கூறினார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
“ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக ஒற்றுமைக்கு நானே காரணம். அதிமுக ஆட்சி தொடர்ந்ததற்கும் நான் முக்கிய காரணம்” என்றார் வேலுமணி.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்