அனைத்து மாடல் கார்களின் விலையையும் மாருதி நிறுவனம் உயர்த்துகிறது. செப்டம்பர் முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என பங்குச்சந்தைகளுக்கு அனுப்பிய கடிதத்தில் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் இந்த விலையேற்றத்தை செய்ய வேண்டியிருக்கிறது என மாருதி தெரிவித்திருக்கிறது.
அனைத்து மாடல் கார்களிலும் இந்த விலை உயர்வு இருந்தாலும், எவ்வளவு விலை உயரும் என்பதை மாருதி இன்னும் அறிவிக்கவில்லை. ஏற்கெனவே இந்த ஆண்டு தொடக்கம் முதல், தொடர்ந்து வாகனங்களின் விலையை மாருதி உயர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் ஜனவரி, ஏப்ரல், ஜூன் மாதத்தில் வாகனங்களின் விலை உயர்த்தப்பட்டது. ஜூலையிலும் ஸ்விப்ட், சிஎன்ஜி ரக வாகனங்களுக்கு விலையை மாருதி உயர்த்தியது.
தற்போது ஐந்தாவது முறையாக இந்த விலையேற்றம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூலப்பொருள் விலையேற்றம், சிப் பற்றாக்குறை முதலானவற்றால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்புடைய செய்தி: 'சிப்' பற்றாக்குறை: 30% உற்பத்தி குறையும் அபாயத்தில் மாருதி
தவிர, அதிக ஜிஎஸ்டி வரியால் விற்பனையும் சரிந்து வருகிறது. விலை ஏற்றப்படும் என்னும் அறிவிப்பால் மாருதி சுசூகி பங்குகள் 2 சதவீதம் அளவுக்கு உயர்ந்து வர்த்தகமாகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3ztnWBBஅனைத்து மாடல் கார்களின் விலையையும் மாருதி நிறுவனம் உயர்த்துகிறது. செப்டம்பர் முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என பங்குச்சந்தைகளுக்கு அனுப்பிய கடிதத்தில் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் இந்த விலையேற்றத்தை செய்ய வேண்டியிருக்கிறது என மாருதி தெரிவித்திருக்கிறது.
அனைத்து மாடல் கார்களிலும் இந்த விலை உயர்வு இருந்தாலும், எவ்வளவு விலை உயரும் என்பதை மாருதி இன்னும் அறிவிக்கவில்லை. ஏற்கெனவே இந்த ஆண்டு தொடக்கம் முதல், தொடர்ந்து வாகனங்களின் விலையை மாருதி உயர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் ஜனவரி, ஏப்ரல், ஜூன் மாதத்தில் வாகனங்களின் விலை உயர்த்தப்பட்டது. ஜூலையிலும் ஸ்விப்ட், சிஎன்ஜி ரக வாகனங்களுக்கு விலையை மாருதி உயர்த்தியது.
தற்போது ஐந்தாவது முறையாக இந்த விலையேற்றம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூலப்பொருள் விலையேற்றம், சிப் பற்றாக்குறை முதலானவற்றால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்புடைய செய்தி: 'சிப்' பற்றாக்குறை: 30% உற்பத்தி குறையும் அபாயத்தில் மாருதி
தவிர, அதிக ஜிஎஸ்டி வரியால் விற்பனையும் சரிந்து வருகிறது. விலை ஏற்றப்படும் என்னும் அறிவிப்பால் மாருதி சுசூகி பங்குகள் 2 சதவீதம் அளவுக்கு உயர்ந்து வர்த்தகமாகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்