பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பவினா படேலுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாரலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்துள்ளார் இந்திய வீராங்கனை பவினா. இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தரநிலையில் முதல் இடத்தில் உள்ள சீனாவின் ஸோ யிங்-கை -எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் 7-11,7-11, 6-11 என்ற கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தார் பவினா. இதன் மூலம் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வசமாக்கினார் பவினா.
இந்தியா டேபிள் டென்னிஸ் போட்டியில் பெறும் முதல் பதக்கம் இது. பாராலிம்பிக் போட்டியில் இந்தியா பெறும் 5 ஆவது வெள்ளிப்பதக்கமாகும். பாராலிம்பிக்கில் வெள்ளி வென்றுள்ள பவினாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பவினாவின் வாழ்க்கைப் பயணம் விளையாட்டு துறையை நோக்கி இளைஞர்கள் வருவதற்கு ஊக்குவிக்கும் என பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3ynI06Rபாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பவினா படேலுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாரலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்துள்ளார் இந்திய வீராங்கனை பவினா. இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தரநிலையில் முதல் இடத்தில் உள்ள சீனாவின் ஸோ யிங்-கை -எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் 7-11,7-11, 6-11 என்ற கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தார் பவினா. இதன் மூலம் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வசமாக்கினார் பவினா.
இந்தியா டேபிள் டென்னிஸ் போட்டியில் பெறும் முதல் பதக்கம் இது. பாராலிம்பிக் போட்டியில் இந்தியா பெறும் 5 ஆவது வெள்ளிப்பதக்கமாகும். பாராலிம்பிக்கில் வெள்ளி வென்றுள்ள பவினாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பவினாவின் வாழ்க்கைப் பயணம் விளையாட்டு துறையை நோக்கி இளைஞர்கள் வருவதற்கு ஊக்குவிக்கும் என பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்