கர்நாடகாவின் மைசூரு பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார் . இவ்விவகாரத்தில், தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் தலைமறைவாக இருப்பதாக கூறி, அவரை தேடும் பணியில் கர்நாடக போலீஸ் ஈடுபட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாநில அரசு ஒரு சிறப்பு குழுவை அமைக்கும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் எஸ் பொம்மை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24ம் தேதி மைசூரு சாமுண்டி மலைப்பகுதியில் இச்சம்பவம் நடந்திருந்தது. இதில் பாதிக்கப்பட்ட அம்மாணவி, எம்.பி.ஏ. படித்துவந்தவர். தனது ஆண் நண்பருடன் மலைக்குன்றுக்கு சென்றுகொண்டிருந்த மாணவியை, குடிபோதையிலிருந்த கூலித்தொழிலாளர்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தபோது கிடைத்த செல்ஃபோன் சிக்னல் அடிப்படையில், கர்நாடக தனிப்படை போலீஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கைதானவர்கள் திருப்பூர், ஈரோடு பகுதிகளை சேர்ந்த கார்ப்பெண்டர், எலக்ட்ரிஷன், ஓட்டுநர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2XTOL3Jகர்நாடகாவின் மைசூரு பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார் . இவ்விவகாரத்தில், தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் தலைமறைவாக இருப்பதாக கூறி, அவரை தேடும் பணியில் கர்நாடக போலீஸ் ஈடுபட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாநில அரசு ஒரு சிறப்பு குழுவை அமைக்கும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் எஸ் பொம்மை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24ம் தேதி மைசூரு சாமுண்டி மலைப்பகுதியில் இச்சம்பவம் நடந்திருந்தது. இதில் பாதிக்கப்பட்ட அம்மாணவி, எம்.பி.ஏ. படித்துவந்தவர். தனது ஆண் நண்பருடன் மலைக்குன்றுக்கு சென்றுகொண்டிருந்த மாணவியை, குடிபோதையிலிருந்த கூலித்தொழிலாளர்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தபோது கிடைத்த செல்ஃபோன் சிக்னல் அடிப்படையில், கர்நாடக தனிப்படை போலீஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கைதானவர்கள் திருப்பூர், ஈரோடு பகுதிகளை சேர்ந்த கார்ப்பெண்டர், எலக்ட்ரிஷன், ஓட்டுநர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்