“டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல முடியாதது ஏமாற்றமளிக்கிறது. 2024-இல் தங்கப் பதக்கத்திற்காக முயற்சி செய்வேன்” என்று இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்தார்
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்த போட்டியில், 65 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. இந்நிலையில் அவர், தான் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம் அளிப்பதாக கூறியிருக்கிறார். 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முயற்சிப்பேன் என்றும் அவர் கூறினார்.
மேலும், "ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை, அன்பு மற்றும் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்" என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்