காஷ்மீர் பள்ளத்தாக்கின் பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீா் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள மைதானத்தில் காஷ்மீர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த ஆட்டத்தை பாா்வையிட காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சினார் படைப்பரிவின் லெப்டினன்ட் ஜெனரல் டி.பி. பாண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘இது ஒரு விளையாட்டு மைதானம். இங்கே வெளியாட்களைப் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் நினைவில் கொள்ளுங்கள். இங்குள்ள பாதுகாப்பு நிலைமை எங்கள் கட்டுக்குள்தான் உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் பாதுகாப்பு குறித்து கவலைப்படத் தேவையில்லை. காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களால் நீரஜ் சோப்ராவை போல் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல முடியும்’’ என்று தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3DtCMKtகாஷ்மீர் பள்ளத்தாக்கின் பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீா் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள மைதானத்தில் காஷ்மீர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த ஆட்டத்தை பாா்வையிட காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சினார் படைப்பரிவின் லெப்டினன்ட் ஜெனரல் டி.பி. பாண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘இது ஒரு விளையாட்டு மைதானம். இங்கே வெளியாட்களைப் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் நினைவில் கொள்ளுங்கள். இங்குள்ள பாதுகாப்பு நிலைமை எங்கள் கட்டுக்குள்தான் உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் பாதுகாப்பு குறித்து கவலைப்படத் தேவையில்லை. காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களால் நீரஜ் சோப்ராவை போல் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல முடியும்’’ என்று தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்