மத்திய பிரதேச பாஜக பிரமுகரொருவர், பெட்ரோல் விலை உயர்வு குறித்து பத்திரிகையாளர் கேள்வி கேட்டபோது அதற்குரிய பதிலை கூறுவதற்கு மறுத்து, “விலைக்குறைவான பெட்ரோலுக்கு, நீங்கள் தலிபான்கள் ஆளும் ஆப்கனுக்கு செல்லுங்கள்” என காட்டமாக கூறிய சம்பவம், சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ம.பி.யின் கட்னி பகுதி பாஜக மாவட்ட பிரிவு தலைவரான ராம்ரதன் பாயல்தான் இந்த சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் நபர். பெட்ரோல் விலை உயர்வு மற்றும் மூன்றாவது அலை கொரோனாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த கேள்வியின்போது அவர் இந்த சர்ச்சையான பதிலை கூறியிருக்கிறார்.
பெட்ரோல் விலையுயர்வு குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “தலிபானுக்கு செல்லுங்கள். அங்கு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50க்குத்தான் விற்கப்படுகிறது. அங்கு சென்று பெட்ரோல் நிரப்பிக் கொள்ளுங்கள். அங்கு பெட்ரோல் போட்டுக்கொள்ள உடன் யாரும் இருக்க மாட்டார்கள். இந்தியாவில் குறைந்தபட்சம் உங்களுக்கு பாதுகாப்பாவது இருக்கிறது.
நீங்கள் பத்திரிகையாளர்கள்தானே... உங்களுக்கு நாட்டின் நிலைமை புரியவில்லையா? மோடிஜி சூழலை எப்படி கையாள்கிறார் என்பதை பார்க்கின்றீர்கள்தானே? இப்போதுகூட அவர் நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் பொருள்களை வழங்கி வருகிறார்” என்றுள்ளார்.
மூன்றாவது அலை கொரோனா குறித்து பேசும்போது, “இதற்கு முன்னர் இந்தியா இரண்டு அலை கொரோனாவை எதிர்கொண்டாது. மூன்றாவது அலை, விரைவில் வந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.
சர்ச்சையை அதிகரிக்கும் வகையில், பத்திரிகையாளர் சந்திப்பின்போது ராம்ரதன் பாயல் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் யாருமே மாஸ்க் அணியாமல் இருந்துள்ளனர். ஆனால் பத்திரிகையாளர்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
முன்னதாக பீஹார் பாஜகவை சேர்ந்த ஹரி பூஷன் தாகூர் என்பவர், “இந்தியாவில் வாழ்வதற்கு பயமாக உள்ளது என்பவர்கள், போர்க்களமாக இருக்கும் நாட்டுக்கு (ஆப்கன்) செல்லலாம். அங்கு பெட்ரோல் டீசல் விலையும் குறைவுதான். அங்கு சென்று வாழ்ந்து பார்த்தால், இந்தியாவின் அருமை புரியும்” என்றுள்ளார்.
இப்படி தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் பெட்ரோல் விலை உயர்வை குறித்து கேள்வி கேட்போரை ஆப்கனுக்கு செல்ல சொல்வது, கடும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2W854JGமத்திய பிரதேச பாஜக பிரமுகரொருவர், பெட்ரோல் விலை உயர்வு குறித்து பத்திரிகையாளர் கேள்வி கேட்டபோது அதற்குரிய பதிலை கூறுவதற்கு மறுத்து, “விலைக்குறைவான பெட்ரோலுக்கு, நீங்கள் தலிபான்கள் ஆளும் ஆப்கனுக்கு செல்லுங்கள்” என காட்டமாக கூறிய சம்பவம், சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ம.பி.யின் கட்னி பகுதி பாஜக மாவட்ட பிரிவு தலைவரான ராம்ரதன் பாயல்தான் இந்த சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் நபர். பெட்ரோல் விலை உயர்வு மற்றும் மூன்றாவது அலை கொரோனாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த கேள்வியின்போது அவர் இந்த சர்ச்சையான பதிலை கூறியிருக்கிறார்.
பெட்ரோல் விலையுயர்வு குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “தலிபானுக்கு செல்லுங்கள். அங்கு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50க்குத்தான் விற்கப்படுகிறது. அங்கு சென்று பெட்ரோல் நிரப்பிக் கொள்ளுங்கள். அங்கு பெட்ரோல் போட்டுக்கொள்ள உடன் யாரும் இருக்க மாட்டார்கள். இந்தியாவில் குறைந்தபட்சம் உங்களுக்கு பாதுகாப்பாவது இருக்கிறது.
நீங்கள் பத்திரிகையாளர்கள்தானே... உங்களுக்கு நாட்டின் நிலைமை புரியவில்லையா? மோடிஜி சூழலை எப்படி கையாள்கிறார் என்பதை பார்க்கின்றீர்கள்தானே? இப்போதுகூட அவர் நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் பொருள்களை வழங்கி வருகிறார்” என்றுள்ளார்.
மூன்றாவது அலை கொரோனா குறித்து பேசும்போது, “இதற்கு முன்னர் இந்தியா இரண்டு அலை கொரோனாவை எதிர்கொண்டாது. மூன்றாவது அலை, விரைவில் வந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.
சர்ச்சையை அதிகரிக்கும் வகையில், பத்திரிகையாளர் சந்திப்பின்போது ராம்ரதன் பாயல் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் யாருமே மாஸ்க் அணியாமல் இருந்துள்ளனர். ஆனால் பத்திரிகையாளர்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
முன்னதாக பீஹார் பாஜகவை சேர்ந்த ஹரி பூஷன் தாகூர் என்பவர், “இந்தியாவில் வாழ்வதற்கு பயமாக உள்ளது என்பவர்கள், போர்க்களமாக இருக்கும் நாட்டுக்கு (ஆப்கன்) செல்லலாம். அங்கு பெட்ரோல் டீசல் விலையும் குறைவுதான். அங்கு சென்று வாழ்ந்து பார்த்தால், இந்தியாவின் அருமை புரியும்” என்றுள்ளார்.
இப்படி தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் பெட்ரோல் விலை உயர்வை குறித்து கேள்வி கேட்போரை ஆப்கனுக்கு செல்ல சொல்வது, கடும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்