வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க மறுத்து சட்டப்பேரவையிலிருந்து அதிமுக பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் முன்மொழிந்தார். தமிழக அரசின் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவின் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதேபோல அதிமுக உறுப்பினர்களும் தமிழக அரசின் தீர்மானத்தை எதிர்த்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். மற்ற கட்சிகள் இந்த தீர்மானத்தை வரவேற்று பேசிய நிலையில், பா.ஜ.க, அதிமுக உறுப்பினர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வெளிநடப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ''வேளாண் மக்கள் நல்ல முறையில் வாழ வேண்டும் என்பதற்காக மத்திய அரசு வேளாண் சட்டங்களை கொண்டுவந்துள்ளது. ஆனால், மாநில அரசாங்கம் உள்நோக்கத்தோடு எதிர்த்து, அதற்கான தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது. ஆகையால் இந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்''என்று தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்