மதுரை மாநகராட்சியில் விதிகளை மீறி பல ஆண்டுகளாக உயர் பதவியில் இருந்த 50க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் மாநகராட்சிகளின் நிர்வாகம் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் இளநிலை பொறியாளர்கள் உதவி பொறியாளர்களாகவும், உதவி பொறியாளர்கள் செயற் பொறியாளராகவும் பொறுப்பு பதவிகளில் பணியில் இருந்து வருகின்றனர்.
பொறுப்பு பதவிகளில் 6 மாதங்களுக்கு மட்டுமே பணிபுரிய வேண்டும் என்பது விதியாகும். இந்நிலையில் விதியை மீறி 6 மாதங்களுக்கு மேல் உயர் பொறுப்பில் இருந்தவர்களை அவர்களது பழைய பொறுப்புகளிலேயே நியமித்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி உதவி செயற்பொறியாளர்கள் உதவி பொறியாளர்களாகவும் இளநிலை பொறியாளர்கள் தொழில்நுட்ப உதவியாளர்களாகவும் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்