திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இன்று முதல் கூடுதலாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.
பால் மற்றும் மருந்தகம் தவிர மளிகைக் கடைகள், காய்கறிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 6 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படவேண்டும் எனக் கூறியுள்ளார். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சூப்பர் மார்க்கெட்கள், வணிக வளாகங்கள் இயங்கத் தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்கவேண்டும், இல்லையெனில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் கூறினார். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி மட்டுமே செயல்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்