உடல்நிலை சரியில்லாத வயதான தந்தைக்கு கொரோனா என பயந்து சாலையில் மகனே வீசிச்சென்ற கொடுமையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை மேலமாசி வீதி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லஷ்மணன் என்பவரின் தந்தை கருப்பத்தேவர் (80). இவர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு எழுதிக்கொடுக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாததால் மகன் வீட்டில் தங்கியிருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து லஷ்மணன் தனது தந்தைக்கு கொரோனா இருக்குமோ என அச்சப்பட்டு, அவரை மனிதநேயம் இன்றி தனது ஆட்டோவில் ஏற்றிவந்து மதுரை மெஜுரா கோட்ஸ் பாலம் அருகில் சாலையோரத்தில் விட்டுச்சென்றுள்ளார். இந்த நிலையில் முதியவர் ஒருவர் உடலில் ஆடைகள் இன்றி, ஈ, எறும்பு மொய்த்தபடி சாலையில் கிடப்பதாக மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் அவர்களுக்கு தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து ரெட்கிராஸ் அமைப்பினரை தொடர்புகொண்டு முதியவரை மீட்டு சிகிச்சையளிக்க உத்தரவிட்டுருந்தார். இதைத் தொடர்ந்து சாலையில் உயிருக்கு போராடிய முதியவரை மீட்ட ரெட்கிராஸ் அமைப்பினர் அவரை அரசு இராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். உடல் நலம் குன்றிய தந்தையை அவரது மகனே சாலையில் வீசிச்சென்ற அவலம் மனிதநேயத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்