Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தொலைநோக்குப் பார்வையில்லாத மேம்போக்கான பட்ஜெட்: சீமான் விமர்சனம்

https://ift.tt/3yMKnB7

தொலைநோக்குப்பார்வையில்லாத, தீர்வுகளை முன்வைக்காத, தன்முரண்பாடுகளைக் கொண்ட மேம்போக்கான நிதிநிலை அறிக்கை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது நிதியாதாரப் பற்றாக்குறையினால் நிலவும் அரசின் பொருளாதார முடக்கத்திற்கான தீர்வுகளையும், மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான வழிகளையும் முன்வைக்காது மேம்போக்காகவும், தன்முரண்களோடும் அமைந்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.

அனைத்து மக்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையானப் பொருளாதார நிலையறிய எல்லாத்துறைகளிலுமுள்ள தரவுகளை ஒன்றிணைக்க முயற்சியெடுக்கப்படும் எனக் கூறுகிறது நிதிநிலை அறிக்கை . இப்போதுதான், மக்களின் பொருளாதார வாழ்நிலையையே அறியப் போகிறார்களென்றால், எதனடிப்படையில் வாக்குறுதிகளை அள்ளி வீசியது திமுக? என்பது புரியவில்லை. கூட்டாட்சி நிதிவடிவம் ஒன்றை உருவாக்குவதற்கு வருவாய் மற்றும் வரிவிதிப்பு தொடர்புடைய சட்டப்பொருளாதார நிபுணர்களைக் கொண்டு ஆலோசனைக்குழு நிறுவப்படும் என அறிவிக்கிறது நிதிநிலை அறிக்கை. ரகுராம் ராஜன் போன்ற உலகப்புகழ் பெற்றப் பொருளாதார ஆலோசகர்களைக் கொண்ட குழு ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கையில், இன்னும் பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் அரசுக்கு ஆலோசனைகளையும் வழங்கவும், வழிநடத்தலை செய்யவுமிருக்கையில், மறுபடியும் ஒரு குழு அமைப்பதன் நோக்கமென்ன?

முந்தைய அதிமுக அரசு பின்பற்றிய அதே பொருளாதாரக்கொள்கையையே அச்சுப்பிசகாது பின்பற்றிக்கொண்டு, மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான வழிகளையும், வாய்ப்புகளையும் ஆராயாத திமுக அரசு, வெறுமனே பொருளாதார நிபுணர்களின் குழுக்களை அமைத்து, காலந்தாழ்த்திக்கொண்டே போவது ஏனென்று தெரியவில்லை. ஏற்கனவே, தமிழகத்தின் பொருளாதாரத்தை வரிகளின் மூலம் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, சுரண்டி சூறையாடிக் கொண்டிருக்கிற சூழலில் எப்போது குழுவின் மூலம் வழிகாட்டுமுறைகளைப் பெற்று, பாஜக அரசிடம் வாதிட்டு நிதியுரிமையை நிலைநாட்டப்போகிறார்கள்? அவ்வளவு நீண்டக்காலநேரம் இருக்கிறதா?

தமிழ்நாட்டின் பொருளாதாரம் நலிவுநிலையிலிருக்கும் சூழலில், மாற்றுப்பொருளாதாரப்பெருக்கத்திற்கான வழிகளைத் தேட வேண்டிய நிலையில், எண்ணற்ற சுற்றுலாத்தளங்களைக் கொண்ட இந்நிலத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்க 187 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானதில்லை. குடும்ப அட்டைகளைக் கொண்டிருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் தலா 1,000 ரூபாய் வழங்குவோம் எனத் தேர்தல் அறிக்கையில் அறிவித்த திமுக, தற்போது இத்திட்டத்தை மிகவும் வறுமை நிலையிலிருக்கும் மக்களுக்கானத் திட்டமென சுருக்கி அறிவித்து, தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனப் பின்வாங்குகிறது. அந்தத் தகுதியை எதனடிப்படையில் நிர்ணயம் செய்வார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதிகச்செலவினங்களைக் கொண்ட எண்ணற்றத் திட்டங்களை முன்வைத்திருக்கிற இந்நிதிநிலை அறிக்கையில் வருவாய்க்கான வழிவகைகளைப் பற்றித் தெளிவாக எதுவும் குறிப்படவில்லை. மரபுசார்ந்த வருவாயான மாநில அரசின் நிதி வருவாய், ஒன்றிய அரசு வழங்கும் நிதிப்பங்கீடு, வரி அல்லாத மாநில அரசின் வருவாய்கள் குறித்து மட்டுமே நிதிநிலை அறிக்கை கூறுகிறதே ஒழிய, புதிய வருவாய்க்கான வாய்ப்புகளைக் கூறவில்லை. பெட்ரோல் விலையை சற்று குறைத்திருப்பது வரவேற்கத்தக்கதென்றாலும், டீசல் விலையையும் குறைத்திருக்கலாம் என்பது மக்களின் எண்ணவோட்டமாக உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடனைத் தள்ளுபடி செய்திருப்பது போன்ற வரவேற்கக்கூடிய சிற்சில அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும் அவை எல்லாவற்றிற்கும் மூலமான வருவாய் ஆதாரம் கேள்விக்குறியாக இருப்பதும், மதுபானக்கடை வருமானத்தை நம்பி நிற்கும் அரசின் இழிநிலையும் கவலையைத் தருகிறது.

மொத்தத்தில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது தொலைநோக்குப்பார்வையோடு பரந்துபட்ட நோக்கத்தோடு முன்வைக்கப்படாது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததினால் எழும் எதிர்மறை விமர்சனங்களைத் தணிப்பதற்காகவும், வெளித்தோற்ற அரசியல் மூலம் விளையும் இலாபக்கணக்கீடுகளுக்காகவுமே இயற்றப்பட்டதாக இருக்கிறது எனப் பகுப்பாய்வு மூலம் மதிப்பீடு செய்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்