தலிபான் படையினர் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றி, ஆட்சியும் அமைத்துள்ளனர். இந்நிலையில் ஜனநாயகம் குறித்து தலிபான் தரப்பில் எந்தவித விரிவான விளக்கமும் தரப்படவில்லை என அந்நாட்டை சேர்ந்த மருத்துவர் வைஸ் புதிய தலைமுறைக்கு தெரிவித்துள்ளார்.
‘நேர்ப்பட பேசு’ விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் நாட்டில் பெண்களுக்கான உரிமை குறித்தும் விளக்கம் எதையும் தலிபான் தெரிவிக்காமல் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
காபூலின் நிலை என்ன?
காபூல் நகரம் தற்போது தலிபான் வீரர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அனைவரும் அமைதியாக இருக்குமாறும், இங்கு நடக்கின்ற எதையும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட யாருக்கும் எதையும் சொல்லக்கூடாது என தலிபான்கள் தரப்பு எங்களுக்கு மெசேஜ் சொல்லியுள்ளது. இதை தவிர நாளை என்ன நடக்கும் என்ற எந்த தகவலும் எங்களுக்கு தரப்படவில்லை. குறிப்பாக அடுத்த அதிபர் யார், நகரை நிர்வகிக்க உள்ளது யார் என்ற எந்த தகவலும் இல்லை.
நிமிடத்திற்கு நிமிடம் ஒவ்வொரு விதமான தகவல் மீடியாக்களில் வெளியாகின்றன. சில நிமிடங்களில் அதற்கும் தலிபானுக்கும் தொடர்பு இல்லை என சொல்லப்படுகிறது. இங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இல்லை.
மக்களின் நிலை என்ன?
இப்போதைக்கு தலிபான் தரப்பு எங்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். நாளை முதல் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பலாம் என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்த தகவலையும் உறுதியானதாக இல்லை.
வெளிநாட்டு மக்களுக்கு உதவ அதிகாரிகள் உள்ளனரா?
காபூல் விமான நிலையத்தை அமெரிக்க ராணுவம் முழுவதுமாக கட்டுப்படுத்தி வருகிறது. விமான நிலையத்திற்கு வெளியில் உள்ள பகுதிகள் தலிபான்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர். வெளிநாட்டவர் விமான நிலையத்தில் முற்றுகையிட்டு வருகின்றனர். குறிப்பாக அமெரிக்க ராணுவத்துடன் பணியாற்றி வருபவர்கள் விமான நிலையத்தில் அதிகம் உள்ளனர். சிலர் விமான நிலையம் மூன்றடுக்கு பாதுகாப்பின் கீழ் இருப்பதாகவும் சொல்கின்றனர்.
போர் முற்றுப் பெற்று விட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். காபூலின் நிலை என்ன?
இப்போதைக்கு இங்கு துப்பாக்கி சூடு ஏதும் இல்லை. குறிப்பாக போர் எதுவும் இருதரப்புக்கும் இடையே இல்லை. இருந்தாலும் ஆங்காங்கே துப்பாக்கி குண்டுகளின் சத்தம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது.
வெளி உலகிற்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ஜனநாயகம், பெண்களின் உரிமை, கல்வி மாதிரியானவை குறித்து தலிபான் தரப்பில் எந்தவித விரிவான விளக்கமும் தரப்படவில்லை. அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களாக கொண்டு வந்த மாற்றத்தை அப்படியே தலிபான்களும் கடைபிடித்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது” என தெரிவித்துள்ளார் மருத்துவர் வைஸ்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்