'செய்திகள் மூலம் மக்களிடையே சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் தொலைக்காட்சி புதிய தலைமுறை' என பாராட்டு தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
11ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'புதிய தலைமுறை' தொலைக்காட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துக் குறிப்பில், ''உள்ளூர் விவகாரங்கள் முதல் உலக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் வரை மக்களுக்கு வழங்குவது பாராட்டத்தக்கது. மக்களின் கோரிக்கைகள் நிறைவேற 'புதிய தலைமுறை' குரல் கொடுக்கிறது. ஜனநாயக கோட்பாடுகளை நிலைநிறுத்தும் பங்கை ஊடகம் வகிக்கிறது. வலிமையான மற்றும் செழுமையான இந்தியாவை உருவாக்கும் முயற்சிக்கு ஊடகம் உறுதுணையாக இருக்கிறது.
தமிழ் கலாசாரத்தை மேலும் வலுப்படுத்தும் பணியை 'புதிய தலைமுறை' தொடரும் என உறுதியாக நம்புகிறேன். செய்திகள் மூலம் மக்களிடையே சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் தொலைக்காட்சி, 'புதிய தலைமுறை'. 10 ஆண்டு நிறைவு என்பது மேலும் சிறப்பாக செயல்படவும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் புதிய தலைமுறை ஊழியர்களுக்கு உத்வேகம் அளிக்கும். சுகாதாரம், நீர்சேகரிப்பு, பிளாஸ்டிக் தவிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊடகம் செயல்படுகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் ஊடகம் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது'' என பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்