தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.
திண்டிவனம் ராமமூர்த்தி 1981 முதல் 1984 வரை தமிழக எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1984 முதல் 1990 வரை இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருந்தார்.
2011 சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார் திண்டிவனம் ராமமூர்த்தி. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். ஆனால் சில மாதத்தி்ல் தனது தனிக் கட்சியை கலைத்துவிட்டு சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு தமிழக பிரிவின் தலைவர் பதவியைத் தந்தார் பவார். அடுத்த சில மாதங்களிலேயே ராமமூர்த்தி தலைமையிலான கமிட்டியே கலைக்கப்பட்டு விட்டதாக அந்த கட்சியின் அகில இந்திய கமிட்டி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இன்று காலமான திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3rYHIBQதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.
திண்டிவனம் ராமமூர்த்தி 1981 முதல் 1984 வரை தமிழக எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1984 முதல் 1990 வரை இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருந்தார்.
2011 சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார் திண்டிவனம் ராமமூர்த்தி. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். ஆனால் சில மாதத்தி்ல் தனது தனிக் கட்சியை கலைத்துவிட்டு சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு தமிழக பிரிவின் தலைவர் பதவியைத் தந்தார் பவார். அடுத்த சில மாதங்களிலேயே ராமமூர்த்தி தலைமையிலான கமிட்டியே கலைக்கப்பட்டு விட்டதாக அந்த கட்சியின் அகில இந்திய கமிட்டி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இன்று காலமான திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்