டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி பிரிட்டனுக்கு எதிரான வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் தோல்வியை தழுவியது. முதல் மூன்று கால் (Quarter) பகுதி வரை ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்த இந்தியா, நான்காவது கால் பகுதியில் மட்டுமே அந்த கட்டுப்பாட்டை நழுவவிட்டது. அது வீழ்ச்சிக்கு வித்திட்டது.
இந்நிலையில் போட்டி முடிந்ததும் தோல்வி கொடுத்த வலியில் மூழ்கியிருந்த இந்திய வீராங்கனைகளிடம் பிரதமர் மோடி போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
“கலங்காதீர்கள், இந்தியாவே உங்களை எண்ணி பெருமை கொள்கிறது. உங்களது கடின உழைப்பால் பல தசாப்தங்களுக்கு பிறகு இந்தியாவின் அடையாளமான ஹாக்கி விளையாட்டு புத்துயிர் பெற்றுள்ளது. உங்களால் முடிந்த வரை நீங்கள் முயற்சித்து பார்த்தீர்கள். அதுவே வெற்றி தான். நீங்கள் களத்தில் சிந்திய ஒவ்வொரு சொட்டு வியர்வையும் கோடான கோடி மகளிருக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. அனைத்து வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளருக்கும் எனது வாழ்த்துகள். வரும் காலம் இதைவிட சிறப்பானதாக அமையும்” என தெரிவித்துள்ளார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2WWJAQ5டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி பிரிட்டனுக்கு எதிரான வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் தோல்வியை தழுவியது. முதல் மூன்று கால் (Quarter) பகுதி வரை ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்த இந்தியா, நான்காவது கால் பகுதியில் மட்டுமே அந்த கட்டுப்பாட்டை நழுவவிட்டது. அது வீழ்ச்சிக்கு வித்திட்டது.
இந்நிலையில் போட்டி முடிந்ததும் தோல்வி கொடுத்த வலியில் மூழ்கியிருந்த இந்திய வீராங்கனைகளிடம் பிரதமர் மோடி போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
“கலங்காதீர்கள், இந்தியாவே உங்களை எண்ணி பெருமை கொள்கிறது. உங்களது கடின உழைப்பால் பல தசாப்தங்களுக்கு பிறகு இந்தியாவின் அடையாளமான ஹாக்கி விளையாட்டு புத்துயிர் பெற்றுள்ளது. உங்களால் முடிந்த வரை நீங்கள் முயற்சித்து பார்த்தீர்கள். அதுவே வெற்றி தான். நீங்கள் களத்தில் சிந்திய ஒவ்வொரு சொட்டு வியர்வையும் கோடான கோடி மகளிருக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. அனைத்து வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளருக்கும் எனது வாழ்த்துகள். வரும் காலம் இதைவிட சிறப்பானதாக அமையும்” என தெரிவித்துள்ளார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்