Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் அறிவிப்பு - இனிப்பு வழங்கி கொண்டாடிய மக்கள்

தமிழகத்தில் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உருவாக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை அந்தந்த ஊர்களில் மக்களும் அரசியல் கட்சியினரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

147 ஆண்டு பழமை வாய்ந்த கரூர் நகராட்சி மாநகராட்சியாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் கரூர் பேருந்து நிலைய ரவுன்டானா பகுதியில் பொது மக்களும் திமுகவினரும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். நகராட்சி கட்டடத்தின் முன்பு நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் திமுகவினர் பெரியார் சிலை, அண்ணா சிலை, காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து நகரின் முக்கிய பகுதிகளில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பேரூராட்சி நகராட்சியாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் பேரூராட்சியும் நகராட்சியாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை அப்பகுதி மக்களும் அரசியல் கட்சியினரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/38bRhV0

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்