Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

‘ரியல் கபீர் கான்கள்': இந்திய ஹாக்கி அணியின் வெற்றிக்கு பின்நிற்கும் ரியல் நாயகர்கள்

https://ift.tt/3fnH23J

136.64 கோடி மக்களை கொண்டுள்ள இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு ஹாக்கி. தற்போது ஒலிம்பிக்கில் தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பெருவாரியான இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர் இந்திய ஹாக்கி அணியின் ஆடவர் மற்றும் மகளிர் அணியின் விளையாட்டு வீரர்கள். இதற்கான காரணம் என்ன?

வீரர்கள், அவர்களுக்கு உதவுபவர்கள் என பலரது உழைப்பு இதற்கு பின்னால் இருந்தாலும் அடிப்படை காரணமாக, காரண கர்த்தாவாக இருப்பது பயிற்சியாளர்கள்தான். 

2007-இல் ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில் வெளியான ‘சக் தே இந்தியா’ திரைப்படத்தில் இந்திய அணி வீராங்கனைகளின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் பயிற்சியாளர் கபீர் கானைபோலவே, ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு இரண்டு கபீர் கான்கள். இவர்களது உழைப்பு வீரர்களின் ஆட்ட நுணுக்கத்திற்கும், நேர்த்திக்கும் பின்னால் புதைந்துள்ளது.  

இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக கிரஹாம் ரீட் மற்றும் இந்திய மகளிர் ஹாக்கி அணி பயிற்சியாளராக ஜோர்ட் மரிஜெனும் பணியாற்றி வருகின்றனர். தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா நாக் அவுட் சுற்றுகளில் அசத்த முக்கியக் காரணம் இவர்களது தரமான பயிற்சி. இவர்கள் குறித்து பார்ப்போம். 

image

கிரஹாம் ரீட்!

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் கிரஹாம் ரீட். 57 வயதானவர். ஹாக்கி விளையாட்டில் இவருக்கு இருக்கும் நீண்ட நெடிய அனுபவத்தை தனது பயிற்சியாளர் பணிக்கு கச்சிதமாக பயன்படுத்தி வருகிறார். 

1980-களில் துவங்கி 1992 வரை சுமார் ஒரு மாமாங்கம் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஹாக்கி விளையாடி உள்ளார். உலகக் கோப்பை, 1992 ஒலிம்பிக், ஒன்பது முறை சாம்பியன்ஸ் டிராபியில் அவர் விளையாடிய அணி பதக்கத்தை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்காக மிட்-ஃபீல்டர் மற்றும் தடுப்பாட்ட வீரராக அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 36 சர்வதேச கோல்களை அடித்துள்ளார். 

பின்னர் 2009-இல் ஆஸ்திரேலிய ஹாக்கி அணியின் துணை பயிற்சியாளராக இணைந்தார் ரீட். 2012 சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு சாம்பியனாக்கினார். தொடர்ந்து 2014 முதல் ஆஸ்திரேலிய அணியின் முழுநேர பயிற்சியாளராக பொறுப்பேற்றார். 2016 வரை அணியை வழிநடத்திய அவர் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு அந்த பொறுப்பிலிருந்து விலகினார். 

நெதர்லாந்து தேசிய ஆடவர் ஹாக்கி அணியின் துணை பயிற்சியாளர் மற்றும் ஆம்ஸ்டர்டாம் கிளப் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றியவர் கடந்து 2019-இல் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

image

அந்த பொறுப்பில் அவருக்கு கொடுக்கப்பட்ட  முதல் டாஸ்க் இந்திய ஆடவர் ஹாக்கி அணியை தகுதி பெற செய்வது. அதை அப்படியே செய்தார். தொடர்ந்து சிறப்பான முறையில் வீரர்களை தயார்படுத்தி டோக்கியோவுக்கு அழைத்து வந்தார்.  

ரியோ ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், நியூசிலாந்து, ஜப்பான் மாதிரியான அணிகள் இடம் பெற்றிருந்த குரூப் ஏ-வில் இடம் பெற்றிருந்து இந்திய அணி. ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றிகளை குவித்து காலிறுதியில் பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. அறியிறுதில் பெல்ஜியத்திடம் தோல்வியை தழுவி வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது. 

“இப்போதைக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் மூன்றாவது சிறந்த அணியாக திகழ்வது தான் எங்களுக்கு தேவை. அதன்படி சிறப்பாக விளையாடி வெண்கல பதக்கத்தை வெல்வோம்” என சூளுரைத்துள்ளார் கிரஹாம் ரீட். 

image

ஜோர்ட் மரிஜென்!

டச்சு (நெதர்லாந்து) நாட்டை சேர்ந்தவர் ஜோர்ட் மரிஜென். 47 வயதான இவர் கடந்த இருபது வருடங்களாக ஹாக்கி அணிகளுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார். கிளப் அளவில் டச்சு நாட்டில் மிகவும் பிரபலமான ஹாக்கி கிளப் அணியான Den Bosch அணிக்காக விளையாடி உள்ளார். 

பின்னர் உள்நாட்டு அளவில் கிளப் அணிகளுக்கு பயிற்சி கொடுத்த அவருக்கு 2013 வாக்கில் நெதர்லாந்து நாட்டின் அண்டர் 21 ஆடவர் ஹாக்கி அணிக்கு பயிற்சி கொடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து அடுத்த ஆண்டே நெதர்லாந்து மகளிர் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். அந்த காலகட்டத்தில் நெதர்லாந்து மகளிர் அணியை சர்வதேச அளவில் முக்கிய தொடர்களில் வெற்றிநடை போட செய்துள்ளார். 

2017-இல் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இடையில் இந்திய ஆடவர் அணிக்கும் சில காலம் பயிற்சி கொடுத்துள்ளார். அதேநேரத்தில் இப்போது வரை இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பயிற்சி கொடுத்து வருகிறார். 

image

அவரது பயிற்சியின் கீழ் இந்திய மகளிர் ஹாக்கி அணி 2017-ல் மகளிர் ஹாக்கி ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2018 மகளிர் ஹாக்கி ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது இடமும், அதே ஆண்டில் ஆசிய விளையாட்டுகளில் இரண்டாவது இடமும் பிடித்துள்ளது. 

தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்து வரலாறு படைத்துள்ளது இந்திய மகளிர் ஹாக்கி அணி. 

“பதக்கம் வெல்வதற்காக இந்திய அணி முழு கவனத்துடன் விளையாடும்” என்ற நம்பிக்கையை காலிறுதி வெற்றிக்கு பிறகு விதைத்துள்ளார் ஜோர்ட் மரிஜென். 

சக் தே இந்தியா!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்