இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி: ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வியடைந்தது. இறுதிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் பிரிட்டன் அணி 4-3 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.
சிறுமைப்படுத்தியோருக்கு களத்தில் பதிலளித்த வந்தனா: பதக்க வாய்ப்பை இழந்தபோதிலும் ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடி இந்தியாவை தலைநிமிரச் செய்துள்ளார் வந்தனா கட்டாரியா. பட்டியலினப் பெண் என சிறுமைப்படுத்தியோருக்கு களத்தில் பதிலடிக் கொடுத்திருக்கிறார்.
மதுசூதனன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
ஊரடங்கு - முதலமைச்சர் இன்று ஆலோசனை: தமிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளா? கூடுதல் கட்டுப்பாடுகளா? என்பது குறித்து மருத்துவத்துறை செயலாளர், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
கோயில்களில் 'அன்னைத் தமிழில் அர்ச்சனை' திட்டம்: தமிழகம் முழுவதும் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வரும் 47 கோயில்களில் இன்று முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது. அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து நடைமுறைக்கு வந்தது.
சுதந்திர தினம் - நள்ளிரவில் கொண்டாட முடிவு?: 75 ஆவது சுதந்திர தினத்தை நள்ளிரவில் கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமைச் செயலகத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்: சுதந்திரதின விழா ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 7, 9 மற்றும் 13 ஆம் தேதிகளில் வாகன ஒட்டிகள் ஒத்துழைக்குமாறு காவல்துறை அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் பரவலாக மழை: சென்னை, வேலூர், திருப்பத்தூர், நாமக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. வெயில் வாட்டிய நிலையில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இன்று பிளஸ் டூ துணைத் தேர்வுகள் தொடக்கம்: தமிழகத்தில் பிளஸ் டூ துணைத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. பள்ளிகளில் படித்த 25 மாணவர்களும், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர்.
கும்பகோணம் 'ஹெலிகாப்டர் சகோதரர்கள்' கைது: கோடிக்கணக்கில் முதலீடு திரட்டிய மோசடியில் கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் திரையரங்குகள் இன்று முதல் திறப்பு: புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகிறது. இரவு 9 மணி வரை இயங்க மாநில அரசு அனுமதி அளித்திருக்கிறது.
2,500 ஆண்டுகளுக்கு முந்தைய தடயங்கள்: மயிலாடும்பாறையில் 2,500 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் தொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1-ல் வரைவு வாக்காளர் பட்டியல்: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி வெளியிடப்படும் என்றும், பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருக்கிறார்.
ஈமு மோசடி - யுவராஜ் உள்பட மூவருக்கு 10 ஆண்டு சிறை: ஈமு கோழி முதலீட்டு மோசடியில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய யுவராஜ் உட்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2.47 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
ராஜேந்திர பாலாஜி வழக்கு -ஆவணங்களை திரட்டுகிறோம்: முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஆவணங்களை திரட்டுகிறோம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்திருக்கிறது.
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஜாமீன் மனு தள்ளுபடி: இந்து மதம், பாரத மாதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனுவை நாகர்கோவில் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி நிராகரித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2X5xqERஇந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி: ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வியடைந்தது. இறுதிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் பிரிட்டன் அணி 4-3 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்