Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: பள்ளிகள், தியேட்டர்களுக்கு அனுமதி

https://ift.tt/2Wdko82

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த முறை ஊரடங்கு நீட்டிப்பில் தளர்வுகள் எதுவும் வழங்கப்படாத நிலையில் தற்போது கொரோனா தொற்று சற்று குறையத் தொடங்கியதை அடுத்து சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

  • செப்டம்பர் 1-ஆம் தேதிமுதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் 50% மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
  • அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி
  • டிப்ளமோ உள்ளிட்ட அனைத்து பட்டயப்படிப்பு வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்த அனுமதி
  • நீச்சல் குளங்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளுக்கு பயிற்சியாளர்களுடன் 50% இயங்க அனுமதி
  • 50% பார்வையாளர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகளை ஆக்ஸட் 23-ஆம் தேதிமுதல் இயக்க அனுமதி
  • ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி
  • தமிழ்நாடு திறம் மேம்பாட்டு கழகம், மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சிகளுக்கு அனுமதி
  • தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி
  • கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி. கடற்கரைகளில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள், சிறுவியாபாரிகள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
  • தகவல் தொழில்நுட்பம், சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
  • உயிரியல், தாவரவியல் மற்றும் படகு இல்லங்கள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் இயங்க அனுமதி
  • இரவு 9 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இனி 10 மணிவரை செயல்படலாம்.
  • நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதி போன்ற தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்