Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

”சென்னையில் கலா அக்காவைத் தேடிக்கொண்டிருக்கிறேன்” – நடிகர் காளி வெங்கட் சிறப்புப் பகிர்வு

https://ift.tt/3kjmF9T

’சார்பட்டா பரம்பரை’ வெற்றிக்குப்பிறகு லாரன்ஸின் ’ருத்ரன்’, சிவகார்த்திகேயனின் ‘டான்’, பெயரிடப்படாத சாய் பல்லவியின் படம் என பல்வேறு படங்களில் பிஸியாக நடித்துவரும் நடிகர் காளி வெங்கட்டிடம் சென்னை தினம் குறித்து பேசினோம்,

“எனக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கத்தாழம்பட்டி. சினிமாவில் எப்படியாவது பெரியாளாக வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு 15 வயதில் சென்னைக்கு வந்தேன். ’மெட்ராஸ் போய்ட்டா நீ சினிமாவுல நடிகனா ஆகிடலாம்’னு ஊர்க்காரர்கள் சொல்லி அனுப்பினார்கள். இங்கு வந்தபிறகுதான், அவர்கள் சொன்னது மூடநம்பிக்கை என்பது புரிந்தது. சினிமாவில் வாய்ப்பு தேட யாரையும் தெரியவில்லை. வேறு வழியில்லாமல், மளிகைக்கடை வேலைதான் கிடைத்தது. ஏமாற்றத்தால் சென்னை அந்நியமாகவும்  கிராமத்தைப் பிரிந்து வந்துவிட்டோமே என்ற உணர்வையும் கொடுத்தது. அந்த சமயத்தில், சென்னை மக்கள்தான் என்னைத் தாங்கிப்பிடித்தார்கள். அள்ளி அணைத்துக் கொண்டார்கள்.

திருவொற்றியூரில் மளிகைக்கடையில் வேலை செய்யும்போது கடை மூடிய பிறகே சாப்பிட முடியும். யாரென்றே என்னை தெரியாத காலத்தில் மளிகைக்கடை எதிர்வீட்டில் இருந்த கலா அக்கா 7 மணி ஆகிடுச்சின்னா போதும், ’டேய் இங்க வாடா.. வந்து சாப்ட்டு போ’ன்னு உரிமையோடு கூப்டு சாப்பாடு போட்டார். சாப்பாடு என்றால், அது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத சாப்பாடாக இருக்கும். இறால், மீன், மட்டன்னு எது செஞ்சாலும் கூப்ட்டு ‘என் பசங்க எல்லோரும் வெளிநாட்டுல இருக்காங்க. என் புள்ளை மாதிரி உன்னை பார்க்கிறேன்டா’ன்னு சொல்லி சொல்லி சோறு போட்டாங்க. சென்னையின் அடையாளமே கலா அக்கா போன்ற வெள்ளந்தி மக்கள்தான்.

சென்னை ஒரு தாய் மாதிரி. யாரும் தாய்பாலை பகிர்ந்து கொடுக்கமாட்டார்கள். ஆனால், சென்னை பகிர்ந்து கொடுக்கும். இதனைப் புரிந்தபிறகு, நான் சென்னையை விட்டுப் போய்டக்கூடாது என்று உறுதியாக இருந்தேன். அதனால், முதலில்  என்னை சென்னையில் தக்க வைக்க சமையல் வேலை, டீக்கடை வேலை, காய்கறிக் கடை, லோடுமேன் வேலை என பல்வேறு வேலைகளை செய்துதான் தக்கவைத்துக் கொண்டேன். இப்போ, எங்க ஊரைவிட சென்னைதான் பிடிக்கும். கிட்டத்தட்ட 23 வருடம் ஆகிறது. எனக்கு விவரம் தெரிந்ததெல்லாம் சென்னைதான். ஊருக்குப் போனால் ரெண்டு மூனு நாள்கூட இருக்கமாட்டேன்.

image

சினிமாவில் இந்த எதிர்பார்க்காத இடத்தை சென்னைதான் கொடுத்தது. வெள்ளந்தி மனிதர்களுடன் உலாவியதுதான் சினிமாவில் சாதிக்க வைத்தது. கலா அக்கா மாதிரி நிறைய பேர் உதவினார்கள்” என்று உருக்கமுடன் பேசும் நடிகர் காளி வெங்கட்டிடம் “சென்னையில் உங்களுக்குப் பிடித்த இடம் எது?” என்று கேட்டோம்,

”எனக்கு சோறு போட்ட கலா அக்கா வீடுதான். ஆனால், அவங்க இப்போ திருவொற்றியூரில் இல்லை. கலா அக்காவை தேடிக்கிட்டிருக்கேன். வேற இடத்துக்கு மாறிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். சரியான அட்ரஸ் கிடைக்கவில்லை. சீக்கிரம் கண்டுப்பிடித்து கலா அக்காவை பார்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் சினிமாவில் இருப்பதால் இதனையெல்லாம் சொல்லவில்லை. ஒரு கொத்தனாராக இருந்திருந்தால் கூட இதனை சொல்லியிருப்பேன்” என்று நெகிழ்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்