கோவையில் மக்கள் ஆசீர்வாத யாத்திரைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மக்களை சந்திக்கவே யாத்திரை செல்வதாகக் கூறியிருந்தார். பின்னர் மேட்டுப்பாளையத்தில் பேசிய அவர், "மத்திய இணையமைச்சராக பொறுபேற்ற என்னை நாடாளுமன்றத்தில் பாரத பிரதமர் அறிமுகப்படுத்த விடாமல் தடுத்து எதிர்கட்சிகள் ரகளையில் ஈடுபட்டனர். அதனால் தான் இந்த மக்கள் ஆசீர்வாத யாத்திரை நடத்த வேண்டியதாகி விட்டது. சமூக நீதி காக்கும் ஒரே கட்சி பாஜக தான்" என்றும் பேசியுள்ளார்.
புதிதாக பொறுபேற்றுள்ள மத்திய அமைச்சர்கள் அவர்களது சொந்த மாநிலங்களில் மக்களின் ஆதரவை பெற நேரடியாக மக்களை சந்திக்க பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன்படி மத்திய இணையமைச்சராக பொறுபேற்றுள்ள பாஜக வின் முன்னாள் தலைவர் எல்.முருகன் இன்று காலை கோவையில் தனது மக்கள் ஆசீர்வாத யாத்திரையை துவக்கினார். யாத்திரையின் ஒரு பகுதியாக இன்று மாலை மேட்டுப்பாளையம் வந்த எல்.முருகனுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே கூடியிருந்த கட்சியினர் மற்றும் பொது மக்களிடையே பேசிய எல்.முருகன், “சமூக நீதியை பற்றி பேசும் திமுகவில் அக்கட்சியின் தலைவராக ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தவிர வேறு யாரேனும் தலைவராக ஆக முடியுமா? ஆனால் ஏழ்மையான செருப்பு தைக்கும் குடும்பத்தில் பிறந்து விவசாய கூலி வேலை செய்து வந்த என்னை பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக நியமித்தனர் என்பதோடு தற்போது மத்திய இணையமைச்சராகவும் ஆக்கியுள்ளனர். உண்மையாக சமூக நீதி காக்கும் கட்சி பாஜக தான்.
என்னை போன்ற எளியவர்கள், பெண்கள் என மத்திய அமைச்சரவையில் புதிதாக பொறுபேற்றவர்களை பாரத பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைப்பது மரபு. ஆனால் பிரதமர் எங்களை அறிமுகபடுத்தவிடாமல் தடுத்ததோடு நாடாளுமன்றத்தில் கடும் ரகளையில் ஈடுபட்டது காங்கிரஸ், திமுக, கம்யுனிஸ்ட் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரே. அதனால் தான் மக்களிடம் சென்று நேரிடையாக ஆசீர்வாதம் பெற யாத்திரை நடத்துகிறோம்.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஆறாயிரம் உதவி தொகை, ஏழைகளுக்கு இலவச வீடு, இலவச எரிவாயு இணைப்பு திட்டம் என எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு” என பேசினார். யாத்திரையில் மத்திய இணையமைச்சருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்று பேசினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்