ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து, பாகிஸ்தானின் போக்குவரத்துப் பாதைகள் வழியாக இந்தியாவுக்கான அனைத்து இறக்குமதி, ஏற்றுமதிகளையும் தலிபான்கள் நிறுத்தியுள்ளதாக இந்திய ஏற்றுமதி அமைப்பின் கூட்டமைப்பு (FIEO) தெரிவித்துள்ளது.
"நாங்கள் ஆப்கானிஸ்தானின் அடுத்தடுத்த நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கிருந்து இறக்குமதி பாகிஸ்தானின் போக்குவரத்து பாதை வழியாக வருகிறது. தற்போது தலிபான்கள் பாகிஸ்தானுக்கு சரக்குகளை கொண்டு செல்வதை நிறுத்திவிட்டதால், கிட்டத்தட்ட இறக்குமதிகள் நிறுத்தப்பட்டுள்ளன” என்று இந்திய ஏற்றுமதி அமைப்பின் கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரல் அஜய் சஹாய் தெரிவித்தார்.
இதனால் எதிர்காலத்தில் இந்தியாவில் உலர்ந்த பழங்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு கூறுகிறது, ஏனெனில் இந்த பொருட்களில் 85 சதவிகிதம் ஆப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
ஏற்றுமதியைப் பொறுத்தவரை, இந்தியாவிலிருந்து சில பொருட்கள் சர்வதேச வடக்கு-தெற்கு பாதை வழியாக ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், மற்ற பொருட்கள் துபாய் வழியாகச் செல்வதாகவும் சஹாய் கூறினார். ஆப்கானிஸ்தானுடன் இந்தியா ஆரோக்கியமான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய சஹாய், 2021 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி சுமார் 835 மில்லியன் டாலர் என்றும் கூறினார்.
மேலும், “நாம் சுமார் 510 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்துள்ளோம். வர்த்தகம் தவிர, ஆப்கானிஸ்தானில் நமக்கு கணிசமான முதலீடு உள்ளது. நாம் ஆப்கானிஸ்தானில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளோம் மற்றும் ஆப்கானிஸ்தானில் 400-க்கும் மேற்பட்ட திட்டங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன” என்றும் கூறினார்
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானின் முன்னேற்றங்களை அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அங்கு இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3sx7qNWஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து, பாகிஸ்தானின் போக்குவரத்துப் பாதைகள் வழியாக இந்தியாவுக்கான அனைத்து இறக்குமதி, ஏற்றுமதிகளையும் தலிபான்கள் நிறுத்தியுள்ளதாக இந்திய ஏற்றுமதி அமைப்பின் கூட்டமைப்பு (FIEO) தெரிவித்துள்ளது.
"நாங்கள் ஆப்கானிஸ்தானின் அடுத்தடுத்த நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கிருந்து இறக்குமதி பாகிஸ்தானின் போக்குவரத்து பாதை வழியாக வருகிறது. தற்போது தலிபான்கள் பாகிஸ்தானுக்கு சரக்குகளை கொண்டு செல்வதை நிறுத்திவிட்டதால், கிட்டத்தட்ட இறக்குமதிகள் நிறுத்தப்பட்டுள்ளன” என்று இந்திய ஏற்றுமதி அமைப்பின் கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரல் அஜய் சஹாய் தெரிவித்தார்.
இதனால் எதிர்காலத்தில் இந்தியாவில் உலர்ந்த பழங்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு கூறுகிறது, ஏனெனில் இந்த பொருட்களில் 85 சதவிகிதம் ஆப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
ஏற்றுமதியைப் பொறுத்தவரை, இந்தியாவிலிருந்து சில பொருட்கள் சர்வதேச வடக்கு-தெற்கு பாதை வழியாக ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், மற்ற பொருட்கள் துபாய் வழியாகச் செல்வதாகவும் சஹாய் கூறினார். ஆப்கானிஸ்தானுடன் இந்தியா ஆரோக்கியமான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய சஹாய், 2021 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி சுமார் 835 மில்லியன் டாலர் என்றும் கூறினார்.
மேலும், “நாம் சுமார் 510 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்துள்ளோம். வர்த்தகம் தவிர, ஆப்கானிஸ்தானில் நமக்கு கணிசமான முதலீடு உள்ளது. நாம் ஆப்கானிஸ்தானில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளோம் மற்றும் ஆப்கானிஸ்தானில் 400-க்கும் மேற்பட்ட திட்டங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன” என்றும் கூறினார்
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானின் முன்னேற்றங்களை அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அங்கு இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்