Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

மக்கள்தொகை அடிப்படையில் தமிழக எம்பிக்கள் எண்ணிக்கையை குறைப்பதா? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சிக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவின் விவரங்கள் நேற்று வெளியானது. மத்திய அரசின் கொள்கை முடிவை ஏற்று குடும்ப கட்டுப்பாடு திட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்தியதன் மூலம், தமிழ்நாட்டில் மக்கள் தொகை குறைந்ததாக குறிப்பிட்ட நீதிபதிகள், அதனடிப்படையில், 1962ஆம் ஆண்டு 41 பேராக இருந்த தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை, பின்னர் 39ஆக குறைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

image

மக்கள் தொகையை கட்டுப்படுத்த தவறிய உத்தரப் பிரதேசம், பீஹார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் எம்பிக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய தமிழ்நாடு, 1967ஆம் ஆண்டு முதல் 14 லோக்சபா தேர்தல்களில் தலா 2 எம்பிக்கள் வீதம் மொத்தம் 28 எம்பிக்களை இழந்திருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டில் இரு எம்பிக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் மூலம் அரசியல் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய நீதிபதிகள், இதனால் மாநில உரிமையும், அதன் மூலம் கிடைக்கவேண்டிய வளர்ச்சிக்கான திட்டங்களை தமிழ்நாடு இழந்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மொழி வாரி மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அரசியல் அதிகாரம் மற்றும் உரிமைகள் சமமாக இருக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, தொகுதி மறுவரையறை காரணம் காட்டி எம்பிக்கள் எண்ணிக்கையை குறைப்பதை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என்ற நீதிபதிகள், சில முக்கிய கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.

ஒரு எம்பி மூலமாக அந்த மாநிலத்துக்கு 2 கோடி ரூபாய் நலத்திட்ட பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் என்றால், கடந்த 14 தேர்தல்களில் தலா 2 எம்பிக்களை இழந்துள்ள தமிழகத்துக்கு இழப்பீடாக மத்திய அரசு ஏன் 5 ஆயிரத்து 600 கோடியை வழங்கக்கூடாது என நீதிபதிகள் வினவியுள்ளனர். மக்களவை எம்பிக்கள் எண்ணிக்கையை குறைத்தால் அதற்கு பதில் மாநிலங்களவை எம்பிக்கள் எண்ணிக்கையை ஏன் உயர்த்தக்கூடாது என்றும் வினவியுள்ளனர்.

image

இவ்வழக்கில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லிம் லீக் கட்சிகளை நீதிமன்றமே தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்த்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசும், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளும் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/387OH24

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்