தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ள நிலையில், ஓர் இடத்துக்கு மட்டும் வருகிற 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் எனத் தெரிவித்துள்ளார்.
46 வயதான எம்.எம். அப்துல்லா தற்போது திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணியின் இணைச் செயலாளராக உள்ளார். புதுக்கோட்டை முகமது இஸ்மாயில் - நபிஷா பேகத்தின் மகனான அப்துல்லா, பள்ளிப் படிப்பை புதுக்கோட்டையிலும், கல்லூரி படிப்பை சென்னையிலும் முடித்துள்ளார். சென்னை சிஐடி காலனியில் வசித்து வரும் அப்துல்லாவுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
சென்னையில் கல்லூரி படித்தபோது, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பின் காரணமாக திமுகவில் சேர்ந்த அப்துல்லா, பொதுக்குழு உறுப்பினர், சிறுபான்மையினர் அணி துணைச் செயலாளர், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் ஆகிய கட்சிப் பதவிகளைப் பெற்றார்.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் போல், டெல்லியில் ஒரு கட்சி அலுவலகத்தை திமுக தலைமை தொடங்க உள்ளதாகவும் அந்த அலுவலகத்தை கவனித்துக் கொள்ளும் வகையில், உதயநிதி ஸ்டாலின் பரிந்துரையில் அப்துல்லா மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் தற்போதுள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. அதிமுகவின் முஹம்மது ஜான் வகித்த எம்.பி. பதவியை தற்போது திமுகவைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா ஏற்கும் நிலை உருவாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்