நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும்போது போதுமான விவாதங்கள் இல்லாதது வருத்தம் அளிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் 30-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் எந்தவித விவாதங்களுமின்றி இயற்றப்பட்டுள்ளதால் நாடாளுமன்றமே முழுவதுமாக முடங்கிய சூழல் நிலவியது. இந்த சூழ்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த 75-வது சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட தலைமை நீதிபதி என்.வி. ரமணா கொடியேற்றியபிறகு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
‘’விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் இயற்றப்படுவதால் ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன. ஏன் இத்தகைய வகையில் சட்டங்களை உருவாக்குகிறார்கள் என தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும்போது போதுமான விவாதங்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. போதிய விவாதங்கள் நடக்காததால் சட்டத்தின் உள்நோக்கத்தை நீதிமன்றத்தால் கூட புரிந்துகொள்ள முடியவில்லை. இதனால் பல்வேறு வழக்குகள் தேங்கியிருக்கிறது’’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் நடந்த 75வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசியபோது தலைமை நீதிபதி என்.வி. ரமணா பொதுவாக நாடாளுமன்றமும் நீதிமன்றமும் இணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கு நன்மை பயக்கும் என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3CO3Cg2நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும்போது போதுமான விவாதங்கள் இல்லாதது வருத்தம் அளிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் 30-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் எந்தவித விவாதங்களுமின்றி இயற்றப்பட்டுள்ளதால் நாடாளுமன்றமே முழுவதுமாக முடங்கிய சூழல் நிலவியது. இந்த சூழ்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த 75-வது சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட தலைமை நீதிபதி என்.வி. ரமணா கொடியேற்றியபிறகு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
‘’விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் இயற்றப்படுவதால் ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன. ஏன் இத்தகைய வகையில் சட்டங்களை உருவாக்குகிறார்கள் என தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும்போது போதுமான விவாதங்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. போதிய விவாதங்கள் நடக்காததால் சட்டத்தின் உள்நோக்கத்தை நீதிமன்றத்தால் கூட புரிந்துகொள்ள முடியவில்லை. இதனால் பல்வேறு வழக்குகள் தேங்கியிருக்கிறது’’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் நடந்த 75வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசியபோது தலைமை நீதிபதி என்.வி. ரமணா பொதுவாக நாடாளுமன்றமும் நீதிமன்றமும் இணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கு நன்மை பயக்கும் என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்