தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்முறையாக நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, பொதுப்பணித் துறையில் இருந்து நீர்வளத் துறை தனியாக பிரிக்கப்பட்டது. அந்த துறையின் அமைச்சராக துரைமுருகன் நியமிக்கப்பட்டார். அணைகள், ஆறுகள், ஏரி, குளங்கள் மற்றும் நீராதாரத்தை பெருக்குவதற்கான பணிகள் நீர்வளத் துறையின்கீழ் வருகின்றன.
இந்நிலையில், முதல்முறையாக அந்த துறையின் மானியக் கோரிக்கை மீது சட்டமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட உள்ளது. உறுப்பினர்களின் பேச்சைத் தொடர்ந்து, சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோடநாடு விவகாரத்தில் முந்தைய 2 நாட்களாக பேரவை கூட்டத்தை அதிமுக புறக்கணித்த நிலையில், இன்று அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்