ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினரல்லாத நாடு, மாதம் ஒருமுறை கவுன்சிலுக்கு தலைமைப் பொறுப்பேற்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினரல்லாத நாடாக 2 ஆண்டுகளுக்கு இந்தியா இடம்பெற்றிருப்பதற்கான காலம் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கியது.
இந்நிலையில் முதல்முறையாக ஆகஸ்ட் 2-ஆம்தேதி முதல், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக தலைமைப்பொறுப்பை வகிக்கும் இந்தியா, கடல்பகுதி பாதுகாப்பு, அமைதி, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகிய முக்கிய அம்சங்களை முன்னெடுத்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்த சிறப்பும், பொறுப்பும், இந்தியா வசம் வந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக ஐநாவுக்கான இந்திய தூதர் டிஎஸ் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3lmk1lFஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினரல்லாத நாடு, மாதம் ஒருமுறை கவுன்சிலுக்கு தலைமைப் பொறுப்பேற்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினரல்லாத நாடாக 2 ஆண்டுகளுக்கு இந்தியா இடம்பெற்றிருப்பதற்கான காலம் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கியது.
இந்நிலையில் முதல்முறையாக ஆகஸ்ட் 2-ஆம்தேதி முதல், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக தலைமைப்பொறுப்பை வகிக்கும் இந்தியா, கடல்பகுதி பாதுகாப்பு, அமைதி, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகிய முக்கிய அம்சங்களை முன்னெடுத்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்த சிறப்பும், பொறுப்பும், இந்தியா வசம் வந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக ஐநாவுக்கான இந்திய தூதர் டிஎஸ் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்