உலகம் முழுவதும் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது தலிபான் என்ற சொல். யார் இந்த தலிபான்கள்? இவர்களது பின்னணி என்ன? எதனால் உருவானது இந்த அமைப்பு?
'தலிபான்' - பாஷ்டோ மொழியில் மாணவர்கள் என்று பொருள். தலிபான் அமைப்பினரைப் பற்றித் தெரிந்துகொள்ள சோவியத் ஒன்றியத்தின் பிடியில் ஆப்கானிஸ்தான் இருந்த வரலாற்றை அறிந்துகொள்வது அவசியம்.
பல்வேறு நாடுகளை உள்ளடக்கியதாக இருந்த சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர். மறைமுக யுத்தம் உச்சத்தில் இருந்த காலம். உலகநாடுகள் அமெரிக்கா சார்பு, சோவியத் ஒன்றியம் சார்பு என பிரிந்து நின்ற தருணம்.
1978-இல் சோவியத் யூனியன் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் இடது சாரிகள் கம்யூனிஸ்ட் அரசை அரசை அமைத்தனர். ஒரே ஆண்டில் அந்த அரசு கவிழ்க்கப்பட்டது. இதன்பின்னர் ஆப்கனுக்குள் நுழைந்த சோவியத் படைகள் அந்நாட்டையே ஆக்கிரமித்தன. அப்போது சோவியத் யூனியனுக்கு எதிராக போர் புரிய அமெரிக்க ஆதரவுடன் உருவாக்கப்பட்டவர்கள், முஜாஜிதீன்கள். சோவியத் யூனியனுக்கு தலைவலியைக் கொடுக்க இஸ்லாமிய தீவிரவாத கோட்பாட்டை உருவாக்கியது, அமெரிக்கா.
அங்கிருந்துதான் ஜிஹாத், புனித்போர் என்கிற இன்றைய அமெரிக்கா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைக்கும் பயங்கரவாத சொற்கள் பிறப்பெடுத்தன. சோவியத் படைகளுக்கு எதிராக இஸ்லாமிய போராளிகள் கொரில்லா தாக்குதலை தொடுத்தனர். இதனை அமெரிக்கா ஊக்குவித்தது. ஆம், அமெரிக்காவிற்கு அப்போது தெரிந்திருக்கவில்லை தாங்கள் வெட்டும் பயங்கரவாத புதைகுழியில் தாங்களே சிக்கிக் கொள்ளப் போகின்றோம் என்று.
10 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடித்த சோவியத் யூனியன், பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினரை பறிகொடுத்தது. பொதுமக்களும் பெருமளவில் கொன்று குவிக்கப்பட்டனர். பேரிழப்பை சந்தித்த சோவியத், வேறு வழியின்றி 1988ஆம் ஆண்டு ஆப்கானிலிருந்து வெளியேறியது. அப்போது அமெரிக்கா உருவாக்கி வைத்திருந்த இஸ்லாமிய போராளிக் குழுக்களிடையே மிகப்பெரிய அளவில் மோதல் வெடித்தது. இந்த யுத்தங்களில் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர்.
அச்சமயம் பாகிஸ்தான் ஆதரவுடன் பிறந்ததுதான் உலகை குலைநடுங்க வைக்கும் தலிபான்கள் அமைப்பு. அதனை நிறுவியவர் முல்லா முகமது ஓமர் மற்றும் அவரது மாணவர்கள். உருவாக்கப்பட்ட ஆண்டு, 1994. ஆப்கானின் தென்பகுதியில் நிலை கொண்டிருந்த தலிபான்களை பாகிஸ்தான் ஆதரித்து, அரவணைத்தது. பாகிஸ்தான் மதரஸாக்களில் பயின்றவர்கள் தலிபான் இயக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தலிபான்கள் படிப்படியாக தங்களது எல்கையை விரிவுபடுத்தி 1988இல் தலைநகர் காபூலை கைப்பற்றினர். அப்போது ஆப்கான் அதிபராக இருந்தவர் புர்ஹானுதீன் ரப்பானி. ஆப்கன் முஜாஹிதீன் என்ற அமெரிக்க ஆதரவு அமைப்பின் தலைவர்தான் இந்த ரப்பானி. அவரது ஆட்சியை வீழ்த்திவிட்டு அதிகாரத்தை வசப்படுத்தினர், தலிபான்கள்.
விளைவு, இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. தொலைக்காட்சி, திரைப்படம் என அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆண்கள் கட்டாயம் தாடி வளர்க்க வேண்டும், பெண்கள் கட்டாயம் முகத்தை மூட வேண்டும், கார் ஓட்டக்கூடாது, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது, குற்றவாளிகளுக்கு பொதுவெளியில் தண்டனை என தாலிபான்கள் வைத்ததே சட்டமாகிப் போனது. அதில் உச்சம் 2001ஆம் ஆண்டு புத்தர் சிலைகளை தலிபான்கள் வெடிவைத்து தகர்த்த நிகழ்வு.
பாகிஸ்தான் ஆதரவுடன் உருவான தலிபான்கள் காலப்போக்கில் அந்நாட்டுக்கே அச்சுறுத்தலாக மாறினர். ஆப்கானிஸ்தானில் அபின் போதைப் பொருளை தடை செய்ததும் தலிபான்கள் தான். ஒசாமா பின்லேடனும் அல்கொய்தாவும் சர்வதேச பயங்கரவாத இயக்கமாக வேர் பிடித்தது தலிபான்கள் ஆட்சிக் காலத்தில் தான்.
தலிபான்களின் ஆட்சியில் அவர்கள்து கோர நாக்கு நீ்ண்டுகொண்டே சென்ற வேளையில், செப்டம்பர் 11 தாக்குதலை அடுத்து 2001ஆம் ஆண்டு ஆப்கான் மீது படையெடுத்தது, அமெரிக்கா. அப்போது தலிபான்கள் தூக்கி எறியப்பட்டனர்.
தலிபான்கள் என்ற அமைப்பு உருவான பின்னர் ஆப்கானிஸ்தானின் கடந்த 40 ஆண்டுகால வரலாறு ஏவுகணைகளாலும், துப்பாக்கி குண்டுகளாலும், மனிதர்களின் குருதியையும், உடல்களையும் சுமந்து வந்துள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/37MpKJCஉலகம் முழுவதும் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது தலிபான் என்ற சொல். யார் இந்த தலிபான்கள்? இவர்களது பின்னணி என்ன? எதனால் உருவானது இந்த அமைப்பு?

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்