தருமபுரி மாவட்டத்தில் 12 ஆண்டுகளாக தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2010-ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. அத்தொகுதிக்கு உட்பட்ட நாகதாசம்பட்டி கிராமத்தில் திமுக சுவர் விளம்பரத்திற்கு யாரும் அனுமதி கொடுக்கக்கூடாது என செல்வக்குமார் என்பவர் கூறியிருந்தார். ஆனால், பிரகாஷ் என்பவர் வீட்டின் சுவற்றில் திமுகவுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.
இதனால் பிரகாஷ் மற்றும் அவரது சகோதரர்கள் என 4 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறுகின்றனர்.
இந்த நிலையில், ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், தங்கள் பிள்ளைகள் சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3Ab6VMbதருமபுரி மாவட்டத்தில் 12 ஆண்டுகளாக தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2010-ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. அத்தொகுதிக்கு உட்பட்ட நாகதாசம்பட்டி கிராமத்தில் திமுக சுவர் விளம்பரத்திற்கு யாரும் அனுமதி கொடுக்கக்கூடாது என செல்வக்குமார் என்பவர் கூறியிருந்தார். ஆனால், பிரகாஷ் என்பவர் வீட்டின் சுவற்றில் திமுகவுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.
இதனால் பிரகாஷ் மற்றும் அவரது சகோதரர்கள் என 4 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறுகின்றனர்.
இந்த நிலையில், ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், தங்கள் பிள்ளைகள் சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்