ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் கொரோனா 3-வது அலையை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது என்றும் அக்டோபர் மாதத்தில் உச்சத்தில் இருக்கும் எனவும் எச்சரித்துள்ளனர் ஐஐடி வல்லுநர்கள்.
ஹைதராபாத் ஐ.ஐ.டி.யின் மதுகுமளி வித்யாசாகர் மற்றும் கான்பூர் ஐ.ஐ.டி.யின் மனிந்திரா அகர்வால் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கணித முறை அடிப்படையில் கொரோனா மூன்றாவது அலையை கணித்துள்ளனர். இவர்களது ஆய்வறிக்கையின் படி, ''ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன, அவ்வாறு ஏற்பட்டால் அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையும். கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது 3-வது அலை உருவாகலாம்.
ஆனால், இரண்டாவது அலையைப் போன்று, அதில் இருந்த பாதிப்பு அளவுக்கு மூன்றாவது அலையில் இருக்காது. இரண்டாம் அலையில் அதிகபட்சமாக 4 லட்சம் வரை பாதிக்கப்பட்டனர். ஆனால், மூன்றாம் அலையில் ஒரு லட்சம் முதல் அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை பாதிக்கப்படலாம். எங்கள் கணிப்பின்படி ஜூன் மாதம் இறுதியில் நாட்டில் 20 ஆயிரம் பேர் வரை தினசரி பாதிக்கப்பட வேண்டும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை ஏற்படுவது குறித்து இரு நிபுணர்களும் கணித ரீதியிலான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வெளியி்ட்டனர். அந்த அறிக்கையில் குறிப்பிட்டது போன்று ஏறக்குறைய பாதிப்பு இரண்டாவது அலையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்