தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் சாலையில் கிடந்த ரூ. 3.5 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பேருந்து ஓட்டுநருக்கு, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
பாபநாசத்தை சேர்ந்தவர் சூர்யா. இவர், நேற்று முன்தினம் பத்திரத்தை அடகு வைத்து பெற்ற ரூ 3 லட்சத்தி 50 ஆயிரம் பணத்தை, தனது இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கொண்டிருந்தார் அப்போது திருப்பாலத்துறை அருகே வரும்போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் கீழே விழுந்துவிட்டது அதை கவனிக்காமல் சூர்யா சென்றுவிட்டார்.
இந்நிலையில், பின்னால் வாகனத்தில் வந்த அரசு பேருந்து ஓட்டுநர் கண்ணன், கீழே கிடந்த பணத்தை எடுத்து பாபநாசம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக தவற விட்டவரை அழைத்து பணத்தை ஒப்படைத்தார். பின்னர், நேர்மையாக பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு பேருந்து ஓட்டுநர் கண்ணனுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டை தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்