விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை உடனடியாக குறைக்க தமிழகம் உள்ளிட்ட 22 மாநில அரசுகளுக்கு மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடிதம் எழுதியுள்ளார்.
விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவற்றுக்கான எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை 4 சதவிகிதத்திற்குள் மாநிலங்கள் குறைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். விமான எரிபொருள் விலை அதிகரிப்பால் விமான சேவைக்கான ஒட்டுமொத்த செலவும் கணிசமாக அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கேரளா, தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்கள் விமான எரிபொருள் மீதான வரியை குறைத்துள்ளதால் அங்கெல்லாம் விமானப் போக்குவரத்து அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சிந்தியா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்