நாமக்கல் மண்டலத்தில் ஒரேநாளில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் விலை குறைப்பு என கோழிப் பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளில் இருந்து 20 காசுகள் குறைத்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 7-ம் தேதி முட்டை பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்பு குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறுகையில்... ஆடி மாதத்தை ஒட்டி தமிழகத்தில் முட்டை விற்பனை குறைந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் உணவகங்கள், ஹோட்டல்கள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவிலும் முட்டை விற்பனை குறைந்துள்ளது. அதேபோல் வட மாநிலங்களிலும் முட்டை விற்பனை சரிந்து அங்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழகத்தில் முட்டை தேக்கத்தை குறைத்து விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் கொள்முதல் விலையை குறைத்துள்ளதாகவும், இவ்விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்