Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஐசிசி டி20 உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது? அட்டவணை வெளியீடு

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 24-ஆம் தேதி துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் ஏற்கெனவே உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றுவிட்டன. மேலும் 4 அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் இறுதிப் பட்டியலில் இடம்பெறும். முதலில் இந்தப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருந்த சூழலில் கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

image

இந்தத் தொடரில் சூப்பர் 12 மற்றும் முதல் சுற்று ஆட்டங்களில் விளையாட உள்ள அணிகளின் பட்டியலை ஏற்கெனவே வெளியிட்டது ஐசிசி. அதன்படி குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் 1-இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன.

குரூப் A தகுதி சுற்று வெற்றியாளரும், குரூப் B தகுதி சுற்றின் ரன்னரும் விளையாட உள்ளனர். குரூப் 2-வில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் உள்ளன. குரூப் B தகுதி சுற்று வெற்றியாளரும், குரூப் A தகுதி சுற்றின் ரன்னரும் விளையாட உள்ளனர். இப்போது ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

image

தகுதி சுற்றுப் போட்டிகள் அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஓமன், பப்புவா நியூ கினி, இலங்கை, நமீபியா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் தகுதிப்பெறும் நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும். சூப்பர் 12 சுற்றில் முதல் போட்டி அக்டோபர் 23-இல் நடைபெறுகிறது. இதில் அபுதாபியில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. அதே நாளில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் துபாயில் மோதுகின்றன.

image

உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி துபாயில் அக்டோபர் 24-இல் மோதுகின்றன. அக்டோபர் 31-ஆம் தேதி இந்தியா - நியூசிலாந்தை சந்திக்கிறது. நவம்பர் 3 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. பின்பு நவம்பர் 5 இல் தகுதிச் சுற்றின் பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியுடனும், நவம்பர் 8 ஆம் தேதி தகுதிச் சுற்றில் ஏ பிரிவில் முதலிடம் பிடிக்கும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் மோதுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3ATCs5X

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்