டி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் திருச்சி அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற திருச்சி வாியர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.
சேப்பாக் அணியில் ஜெகதீசன் அதிகபட்சமாக 90 ரன்களை குவித்தார். திருச்சி வாரியர்ஸ் தரப்பில் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் ராகில் ஷா மற்றும் பொய்யாமொழி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய திருச்சி வாரியர்ஸ் அணி தொடக்க வீரர்கள் அமீத் சாத்வீக் மற்றும் சந்தோஷ் ஷீவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடிய அமீத் சாத்வீக் 16 பந்துகளில் 36 ரன்களை குவித்து வெளியேறினார். சந்தோஷ் ஷீவ் 12 பந்துகளில் 16 ரன்களை எடுத்து வெளியேறினார்.
அடுத்து களம் இறங்கிய வீரர்கள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் 20 ஓவர்களில் முடிவில் திருச்சி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3smEhVDடி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் திருச்சி அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற திருச்சி வாியர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.
சேப்பாக் அணியில் ஜெகதீசன் அதிகபட்சமாக 90 ரன்களை குவித்தார். திருச்சி வாரியர்ஸ் தரப்பில் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் ராகில் ஷா மற்றும் பொய்யாமொழி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய திருச்சி வாரியர்ஸ் அணி தொடக்க வீரர்கள் அமீத் சாத்வீக் மற்றும் சந்தோஷ் ஷீவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடிய அமீத் சாத்வீக் 16 பந்துகளில் 36 ரன்களை குவித்து வெளியேறினார். சந்தோஷ் ஷீவ் 12 பந்துகளில் 16 ரன்களை எடுத்து வெளியேறினார்.
அடுத்து களம் இறங்கிய வீரர்கள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் 20 ஓவர்களில் முடிவில் திருச்சி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்